Break Up Day :


காதலர்களுக்கான வேலண்டைன்ஸ் டே முடிவுக்கு வந்த நிலையில் இந்த வாரம் முழுக்க மக்கள் Anti -Valentines Day -ஐ அனுசரித்துக் கொண்டிருக்கின்றனர். கிக் டே, பெர்ஃப்யூம் டே, ஃப்ளிர்ட்டிங் டே, கன்ஃபெஷன் டே, மிஸ்ஸிங் டே ஆகியவற்றைத் தொடர்ந்து, வாரத்தின் இறுதி நாள் பிரேக்அப் டே மிக முக்கியமான நாளாகும். பிரேக்அப்கள் கடினமாகவும் வேதனையாகவும் இருக்கலாம், நாம் நேசித்தவர்களைப் பிரிந்து வாழவும், இனி அவர்களுடனான வாழ்க்கை இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளப் பழகுவது கடினம்தானே. 


சிலருக்கு பிரேக் அப் மூலம் சுதந்திரம் திரும்பியதுபோல் தோன்றினாலும், சிலருக்கு அவர்களின் உலகம் தலைகீழாக மாறியது போல் இருக்கும். உலகம் அவர்களுக்கு ஒருபோதும் கருணை காட்டாது அல்லது அவர்கள் மீண்டும் அன்பைக் காணவே மாட்டார்கள் என்று அவர்கள் நம்பத் தொடங்கி விடுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் மனரீதியான வளர்ச்சியின் ஒரு பகுதிதான் இது. 


ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்...பிரேக் அப் தொடர்பான உங்கள் உணர்ச்சிகள் அனைத்தையும் வெளியேற்றுங்கள்


ஒருவரின் உணர்ச்சிகளை அடக்க முயற்சிப்பது நல்ல யோசனையல்ல. குறிப்பாக பிரிந்த உடனேயே எல்லாவற்றையும் சாதாரணமாகப் பார்க்க முடியாது. இருப்பினும், உணர்ச்சிகளைப் பொதுவில் வெளிப்படுத்த முடியாத அளவுக்கு அது தீவிரமானதாக இருக்கலாம், எனவே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், எங்காவது தனிப்பட்ட இடத்திற்குச் சென்று அழுங்கள். சத்தமாக கத்துங்கள். அழுவது முற்றிலும் சரி. மனநல நிபுணர்களிடம் பேசுங்கள். 


உதவி கேட்க வெட்கப்பட வேண்டாம். குடும்பத்தினரும் நண்பர்களும் எப்பொழுதும் உதவ இருக்கிறார்கள், ஆனால் அவர்களுடனான வரம்புகளை அவ்வப்போது உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். தெரபிஸ்ட்களிடமிருந்து உதவி பெறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 


உங்களை நன்றாகப் பார்த்து கொள்ளுங்கள்


உங்களை பராமரித்துக் கொள்வது தேவையற்றது என நீங்கள் கருதலாம். ஆனால் இது போன்ற நேரங்களில் உங்களுக்கு அது பெரிதும் கைகொடுக்கும். உங்களை நீங்கள் சரியாக நடத்துவதே உங்கள் குறிக்கோள். உங்களுக்குப் பிடித்தமானவற்றை வாங்குங்கள், பிடித்த உணவை உண்ணுங்கள்.அவ்வப்போது சாக்லேட் சாப்பிடுவது உங்கள் உணர்ச்சிகளை மேம்படுத்தும்.பழங்கள் காய்கறிகள் என ஊட்டச்சத்து மிக்க உணவாகத் தேர்ந்தெடுத்து உண்ணப் பழகுங்கள். 


புதிய நபர்களுடன் வெளியே சென்று வாருங்கள்


உடனடியாக அடுத்த காதலுக்கான செயல்பாடுகளுக்குள் செல்வது ஆபத்தானது என்றாலும் ஒருவர் தயாராக இருப்பதாக உணரும்போது காதல் செயல்பாடுகளுக்குள் செல்வது நல்லது. உங்கள் பிரேக் அப்பிலிருந்து வெளியேற மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகும். இந்தக் காலக்கட்டத்துக்குப் பிறகு நீங்கள் மீண்டும் டேட்டிங் செல்ல முயற்சிக்கலாம். நினைவிருக்கட்டும் நீங்கள் ஆரோக்கியமாக உணரும்போது மட்டுமே இதனை முன்னெடுக்கவும்.


தூங்கவும், சாப்பிடவும், உடற்பயிற்சி செய்யவும்


உங்கள் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்தக் காலக்கட்டத்தில் கடினமானது என்றாலும் அதனைச் செய்யத் தவற வேண்டாம். ஜிம்மில் இயங்குவது உங்கள் உள்ளிருக்கும் கோபத்தை வெளிக்கொண்டு வர உதவும். நல்ல தூக்கம் உங்கள் உடலுக்குத் தேவை. தேவைப்படும்போது உறங்கவும். நன்கு தேவையானவற்றைச் சாப்பிடவும்.