தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் கடந்த 2016ம் ஆண்டு முதல் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரானது இதுவரை 6 சீசன்களாக நடந்து முடிந்தநிலையில், 7வது சீசனானது வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற இருக்கிறது. மொத்தம் இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கும் நிலையில், இதுவரை நடத்தப்பட்ட போட்டிகளில் வீரர்கள் டிராஃப்ட் முறையில், இந்த வருடம் ஐபிஎல் போன்று வீரர்கள் ஏலத்தில் அடிப்படையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
ஏலம்:
இந்தசூழலில் டிஎன்பிஎல் 2023 ம் ஆண்டிற்கான ஏலம் வருகிற பிப்ரவரி மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் மகாபலிபுரத்தில் உள்ள ஐடிசி கென்சஸ் ஹோட்டலில் நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “ டிஎன்பிஎல்-லில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் ஏற்கனவே 2 வீரர்களை தக்கவைத்து கொண்டுள்ளனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்தில் இடம் பெறுவார்கள். மொத்தம் 942 வீரர்களை கொண்டு நடத்தப்படும் இந்த ஏலத்தில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
விலை பிரிவு:
- ஏ பிரிவுக்கு ரூ.10 லட்சம் (சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள்)
- B பிரிவுக்கு ரூ. 6 லட்சம் (பிசிசிஐ மூத்த உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடிய வீரர்கள்)
- C பிரிவுக்கு ரூ. 3 லட்சம் (பிரிவு A அல்லது B இல் இல்லாத ஆனால் 30 TNPL போட்டிகளுக்கு மேல் விளையாடிய வீரர்கள்)
- D பிரிவு வீரருக்கு ரூ. 1.50 லட்சம் வகை (மற்ற வீரர்கள்)
தக்கவைப்பதற்கான காலக்கெடு ஜனவரி 30, 2023 ஆகும்.
அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியல்:
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - (மீதமுள்ள இருப்பு தொகை: ரூ.61,00,000)
- என்.ஜெகதீசன் - பி பிரிவு
- சசிதேவ்.யு - சி பிரிவு
திண்டுக்கல் டிராகன்ஸ் - (மீதமுள்ள இருப்பு தொகை: ரூ.60,00,000)
- ரவிசந்திரன் அஸ்வின்- ஏ பிரிவு
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் - (மீதமுள்ள இருப்பு தொகை: ரூ.68,50,000)
- துஷார் ரஹேஜா - டி பிரிவு
LYCA கோவை கிங்ஸ் - (மீதமுள்ள இருப்பு தொகை: ரூ.62,50,000)
- ஷாருக் கான் - பி பிரிவு
- சுரேஷ் குமார் - டி பிரிவு
நெல்லை ராயல் கிங்ஸ் - (மீதமுள்ள இருப்பு தொகை: ரூ.62,50,000)
- அஜிதேஷ் - பி பிரிவு
- கார்த்திக் மணிகண்டன் - டி பிரிவு
ரூபி திருச்சி வாரியர்ஸ் - (மீதமுள்ள இருப்பு தொகை: ரூ.64,00,000)
- ஆண்டனி தாஸ் - பி பிரிவு
சேலம் ஸ்பார்டன்ஸ் - (மீதமுள்ள இருப்பு தொகை: ரூ.67,00,000)
- கணேஷ் மூர்த்தி - சி பிரிவு
Siechem மதுரை பாந்தர்ஸ் - (மீதமுள்ள இருப்பு தொகை: ரூ.68,50,000
- கௌதம் - டி பிரிவு
ஏலத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் 70 லட்சத்தை மொத்த தொகையாக கொண்டே, தங்கள் அணிக்கான வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும். 8 அணிகளும் ஏலத்தில் குறைந்தபட்சம் 16 வீரர்களிலிருந்து, அதிகபட்சமாக 20 வீரர்களை தேர்வு செய்யலாம்.