சத்தான காலை உணவு எல்லோருக்கும் மிகவும் அவசியம். காலை உணவை ஒரு ராஜாவைப் போல் சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள். ஏன் தெரியுமா அந்த சாப்பாடும் அதில் கிடைக்கும் ஊட்டச்சத்தும் தான் நமது ஆரோக்கியத்தை. நம் நாளை நாம் எவ்வளவு சுறுசுறுப்பாக எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கிறது.


இந்த காலை உணவு தான் நமது உடலுக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. நமது உடல் தனக்கு தானே ரீசார்ஜ் செய்து கொள்ள இந்த ஊட்டச்சத்து உணவு மிகவும் அவசியம்.


ஆனால் இவை எல்லாம் தெரிந்துமே பலரும் பல தருணங்களில் காலை உணவை தவிர்ப்பது உண்டு. பெரும்பாலும் கிளம்பும் அவசரத்தில் புறக்கணிப்பர். இல்லாவிட்டால் செய்ய சோம்பேறித்தனம் பட்டுவிட்டு புறக்கணிப்பார்கள்.


எத்தனை பரபரப்பாக இருந்தாலும் எளிதாக காலை உணவு செய்ய ஒரு டிஷ் இருக்கிறது. அதுதான் சூஜி ரோல். அட ரவா ரோல் தாங்க. சூஜி என்பது இந்தி வார்த்தை. ஐய்யோ எனக்கு உப்புமா என்றால் அலர்ஜி என்று சொல்பவர்கள் கூட இந்த ரவா ரோலை பிடிக்கவில்லை என்று சொல்ல மாட்டார்கள்.


தேவையான பொருட்கள்:


ரவை - ஒரு கப்


ஆல் பர்போஸ் மாவு - 2 டேபிள் ஸ்பூன்


இன்சி - 1 துண்டு


தயிர் - 1/2 கப்


உப்பு - தேவைக்கேற்ப


தண்ணீர் - அரை கப்


சில்லி ஃப்ளேக்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்


பச்சை மிளகாய் - 2 to 3 துண்டுகளாக நறுக்கியது


கறிவேப்பிலை - 5 to 6


மல்லி இலை - பொடியாக நறுக்கியது.






செய்முறை:


ஒரு கோப்பை ரவையை எடுத்துக் கொள்ளுங்கள். 2 மேஜைக் கரண்டி ஆல் பர்ப்போஸ் மாவு எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு சேர்க்கவும். பின்னர் அதில் இஞ்சி, தண்னீர், உப்பு, ஆகியனவற்றை சேர்த்து நன்றாக கெட்டியான பேஸ்ட் பதத்தில் பிசைந்து கொள்ளவும். பின்னர் அதை ஒரு பவுலில் மாற்றி சில்லி ஃப்ளேக்ஸ், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கறிவேப்பிலை ஆகியனவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.


அடுப்பில் ஒரு பேனை வைக்கவும். அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். அதை நன்றாக கொதிக்க விடவும். ஒரு ஸ்டீல் ப்ளேட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் எண்ணெய் தேய்க்கவும். அதில் கலந்த கலவையை இடவும். பின்னர் அதை கொதிக்கும் தண்ணீர் கொண்ட பேனில் வைத்து மூடி போட்டு மூடவும். மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். அந்தக் கலவை மென்மையானவுடன் வெந்துவிட்டது என்று அர்த்தம். பின்னர் கத்தியைக் கொண்டது அந்த பதார்த்தத்தை ஐந்திலிருந்து ஆறு துண்டுகளாக நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். அவ்வளவு தான் சூஜி ரோல் தயார். இதற்கு தொட்டுக் கொள்ள தக்காளி அல்லது புதினா சட்னி வைத்துக் கொள்ளலாம்.