இன்றைய நவீன உலகத்தில், வீட்டிற்கு ஒருவர், அதிக உடல் எடையுடனோ, உடல் பருமன் பிரச்சனையாலோ பாதிக்கபடுகின்றனர். உடல் எடையை குறைப்பதற்கு பலவித முயற்சிகளை எடுத்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனாலும் எடை குறைய வில்லை என புலம்புகிறவர்கள், உங்களது உணவில் இந்த பானங்களை சேர்த்து கொள்ளுங்கள். உடல் எடை குறையும்.
தண்ணீர் - ஒவ்வொருவரின் உடல் எடைக்கு தகுந்தாற்போல் நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். சராசரியாக 65 கிலோ எடை உடையவர்கள், ஒரு நாளைக்கு 2.2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் 50%க்கும் அதிகமாக தண்ணீரை சத்து நிறைந்து இருக்கிறது. நீங்கள் அன்றாடம் எடுத்து கொள்ளும் தண்ணீர் தான் இதை பேலன்ஸாக வைக்க உதவுகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 2-4 லிட்டர் தண்ணீர் குடிப்பதால், உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் இருக்கும். மேலும் உடல் எடையும் குறையும்.
கிரீன் டீ
கிரீன் டீ ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்து கொண்டால் போதும். இதில் ஆண்டிஆக்ஸிடென்கள் நிறைந்து இருக்கிறது. கிரீன் டீயில் இருக்கும், கேடசின்கள் மற்றும் காபின் போன்றவை உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.இது உடலில் அதிகமாக சேகரமாகும் கொழுப்பு சேராமல் தடுக்கும். மேலும் இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பை குறைவதற்கும் இந்த கிரீன் டீ உதவும்.
பிளாக் டீ மற்றும் காபி
காபி அதிக கலோரி நிறைந்த உணவு. இது ஒரு முறை எடுத்து கொண்டால் போதும்.நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. அதனால் அடுத்த வேலை குறைவாக எடுத்து கொள்வோம். காபியில் பால், மற்றும் சர்க்கரை சேர்க்காமல் எடுத்து கொள்ள வேண்டும். இவைகளை சேர்த்து கொள்ளும் போது உடல் எடை குறையாது. பிளாக் டீ மற்றும் காபி இரண்டும் வளர் சிதை மாற்றத்திற்கும், உடலும் கொழுப்புகள் சேராமலும் பார்த்து கொள்ளும்.
வெஜிடபிள் ஜூஸ்
காய்களில் அதிக நார்சத்து இருப்பதால், அப்படியே சாப்பிடுவதும் நல்லது தான். இருந்தாலும் உடல் பருமன் இருப்பவர்கள், ஜூஸ் குடிக்கும் போது, லெப்டின் அளவு குறையும். இந்த லெப்டின் ஆனது கொழுப்பு செல்களால் வெளியிட படும் ஒரு வித ஹார்மோன் ஆகும்.இது இரத்தத்தில் அதிக அளவு சேரும் போது உடல் பருமன் அதிகரிக்கும். அதனால் வெஜிடபிள் ஜூஸ் ஆக எடுத்து கொள்ளும் போது மேலும் எடை அதிகரிக்காமல் இருக்கும்.
உடல் பருமன் இருப்பவர்கள் சில பானங்களை தவிர்க்க வேண்டும். ஆல்கஹால், சோடா, பழ சாறுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இதில் அதிக கலோரிகள் இருப்பதாலும், இதை எடுத்து கொள்வதால், உடல் எடை அதிகமாகும். எடை குறையாது. இந்த பானங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!