தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச தூக்க தினம் இன்று (மார்ச,17) கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு இந்திய நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களுக்கு சர்ப்ரைஸ் பரிசு வழங்கியுள்ளது. ஒரு மனிதனுக்கு குறைந்தது 6 மணி நேரமாவது நிம்மதியான தூக்கம் வேண்டும் என்று வலியுறுத்துகிறது மருத்துவ உலகம். இன்றைய சூழலில் சீரான தூக்கம் என்பது பலருக்கும் சவாலான ஒன்றாகிவிட்டது. சரியான தூக்கம் இல்லாததால் ஏற்படும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள வேக்ஃபிட் சொலியூசன்ஸ் (Wakefit Solutions)என்ற நிறுவனம் தங்கள் பணியாளர்களுக்கு "Surprise Holiday: Announcing the Gift of Sleep" என்று விடுமுறை வழங்கு இன்ப அதிர்ச்சியை வழங்கியுள்ளது. இ-மெயில் மூலம் நாளைக்கு நீங்கள் பணிக்கு வர வேண்டிய அவசியமில்லை. நன்றாக தூங்கி ஓய்வெடுங்கள். என்று பணியாளர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு விடுமுறை அளித்திருக்கிறது.
பணியாளர்கள் ஆபிஸ் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த நிலையில், சர்ப்ரைசாக வந்த இந்த அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலை பளூ உள்ளிட்டவற்றை எதிர்கொள்ளும் பணியாளர்கள தங்களின் மன ஆரோக்கியத்திற்காகவும், முக்கியத்துவம் வாய்ந்த நாளில் தூக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பணியாளர்களுக்கு விடுமுறை அறிவித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேக்ஃபிட் நிறுவனம் ஒரு ஸ்டார்ட்அப் ஸ்லீபிங் சொலியூசன் சேவைகளை வழங்கி வருகிறது. தூக்க தினத்தின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தூக்கத்தை விரும்புவர்களுக்காக விடுமுறை அளிக்க முடிவெடுத்தும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நிறுவனத்தின் இ-மெயிலில், சர்வதேச தூக்க தினத்தை கொண்டாடும் வேளையில், வெள்ளிக்கிழமை ஆப்சனல் விடுமுறை அளிக்கப்படுகிறது. இன்றைய நாளில் உங்களுக்கு தூக்கத்தைப் பரிசளிக்கிறோம். என்று குறிப்பிட்டிருந்தனர். தூக்க பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் பெட்ஷீட், பெட், உள்ளிட்ட ப்ராட்க்ட்களை விற்பனை செய்து வருகிறது. ' 6th edition of our Great Indian Sleep Scorecard 21% சதவீத மக்கள் பணிகளில் தூக்கம் வருவதாக தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2022 ஆம் ஆண்டில் இருந்து 11% அதிகரித்துள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இந்நிறுவன கடந்தாண்டு தூக்க தினத்தை கொண்டாடும் வகையில், "Right to Nap policy" என்பதை அறிமுகம் செய்தது.
இதன்படி, பணியாளர்கள் தங்கள் வேலை நேரங்களில் 30 நிமிடங்கள் ஓய்வெடுத்து கொள்ளலாம். அதாவது 30 நிமிடங்கள் வரை தூங்கும் நடைமுறையை அமல்படுத்தியது.
மதியம் 30 நிமிடங்கள் வரை தூங்குவதன் மூலம் மனித உடல் புத்துணர்வு பெறும். பணிநேரத்தில் ப்ரோடக்டிவிட்டியை இது அதிகப்படுத்தும் என்பதாலும், பணியாளர்களை ஊக்கப்படுத்தும் விதத்திலும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க.
JP Nadda : ’ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிரான கருவியாகவே மாறிவிட்டார்’ - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!