உடல் ஆரோக்கியத்தில் வைட்டமின் ஈ (Vitamin E) முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிக அளவில் இருக்கிறது. சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துகொள்ள உதவுகிறது. சருமத்தை ஆரோக்கியத்துடன் பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்கள் வைட்டமின் ஈ அதிகமுள்ள உணவுகள் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் உள்ளிட்டவற்றை சரும பராமரிப்பு பழக்கத்தில் அவசியம் இடம்பெற வேண்டியதாகும்.
சரும பராமரிப்புக்கு...
வைட்டமின் ஈ சருமத்தை ஈரப்பத்துடன் பராமரிப்பதுடன், சருமம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவும், நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது. இதனால்தான், சன் ஸ்கிரீன் லோஷன் அல்லது கிரீம் உள்ளிட்டவைகளில் வைட்டமின் ஈ இருப்பதை உறுதி செய்து பயன்படுத்த வேண்டும் என்று அறிவுத்தப்படுகிறது.
நீங்கள் பயன்படுத்தும் கிரீம்களில் வைட்டமின் ஈ இருப்பதாக இருந்தால் சரும பெரிதாக பாதிக்கப்படாது. இயற்கையாக முகம் பொலிவுடன் இருக்க வைட்டமின் ஈ மிகவும் அவசியமாகிறது.
வைட்டமின் ஈ உள்ள கிரீம்கள் அல்லது லோஷன் தோலில் சுருக்கும் ஏற்படுவதைக் குறைக்கும். இது சிறந்த மாய்ஸரைசராக பயன்படுகிறது.
முடி வளர்ச்சிக்கு..
வைட்டமின் ஈ முடி உதிர்தல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு. உச்சந்தலையில் இரத்தம் ஓட்டம் அதிகரிக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெயுடன் வைட்டமின் ஈ எண்ணெய் அல்லது வைட்டமின் ஈ காப்சியூல் ஆகியவற்றை சேர்த்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் குறையும். முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
ஸ்க்ரப்:
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தை ஆரோக்கியத்துடன் வைக்கிறது. இதை தயார் செய்ய, சில துளிகள் வைட்டமின் ஈ மற்றும் சர்க்கரை உடன், ஆலிவ் எண்ணெயை சேர்க்கவும். இந்த பேஸ்டை சருமத்தில் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். சர்க்கரை ஒரு எக்ஸ்ஃபோலியேட்டிங் ஏஜெண்டாக செயல்படுகிறது.
உணவு ஆரோக்கியம்:
ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவது உங்களது சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கையாக உணவு முறை, ஜங்க் உணவுகளைத் தவிர்ப்பது, நேரத்திற்கு சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது, தண்ணீர் அதிகம் குடிப்பது உள்ளிட்டவற்றை கடைப்பிடித்தால் ஆரோக்கியமான சருமம் சிரிக்கும்.
மேலும் படிக்க : Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றில் மோதக்கூடிய அணிகள் என்னென்ன தெரியுமா?
மேலும் படிக்க : Commonwealth Games 2022 Day 1 LIVE: பேக்ஸ்ட்ரோக் பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்