ஒவ்வொரு சில வருடங்களுக்கும் ஒரு புதிய செக்ஸ் பொசிஷன் ட்ரெண்ட் ஆகி வருகிறது, அது நமது செக்ஸ் வாழ்க்கையை சுவாரசியப்படுத்துவதாக அமைகிறது. அந்த வகையில் தற்போது ஸ்பூனிங் பொசிஷன் ட்ரெண்ட் ஆகி வருகிறது.  இது வெறும் பேஷன் அல்ல, இது சான்றளிக்கப்பட்ட பொசிஷன் என்கிறார் பாலியல் சிகிச்சையாளர் மேகன் ஃப்ளெமிங் .


சமீபத்தில், மைண்ட் பாடிகிரீன் என்கிற அமைப்பு ஸ்பூனிங் செக்ஸ் பொசிஷனின் பலன்களைப் பகிர்ந்து கொண்டது, அந்தப் பலன்கள் முடிவில்லாதவை. ஸ்பூனிங் பொசிஷன் என்பது குக்கூன் பாணியில் பார்ட்னர்கள் இருவரும் படுத்து உறங்குவதற்கு மட்டும் அல்ல. நீங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பொருந்திப் போகும்போது உங்கள் துணையின் மடியில் அமர்ந்த நிலையை நீங்கள் முயற்சி செய்யலாம் அல்லது ட்ரெடிஷனல் ஸ்பூனிங் முறையை முயற்சி செய்து, கீழே இருக்கும்  பார்ட்னர் வயிற்றால் படுத்து இருக்கும்படி நீங்கள் பயிற்சி செய்யலாம். நீங்கள் ஒரு குக்கூன் வடிவத்தில் படுத்திருக்கும் போது உங்களால் ஸ்பூனிங் செக்ஸ் பொசிஷனை முயற்சி செய்து பார்க்க முடியும்.


ஸ்பூனிங் செக்ஸ் பொசிஷன் மூலம் உங்கள் பார்ட்னருடனான பாலியல் நெருக்கத்தை மேம்படுத்துவதற்கான சில வழிகள் இங்கே உள்ளன:


1. ஜி-ஸ்பாட்டை எளிதாக அணுக முடியும்


நீங்கள் இருவரும் ஒரே திசையில் படுத்து இருப்பதால், மற்றவரின் ஜி ஸ்பாட்டை பார்ட்னரால் எளிதில் அணுக முடியும். இதனால் அதிக நேரம் செக்ஸில் ஈடுபட முடியும்.


2. நீண்ட நேரம் நீடிக்கும்
நீங்கள் உச்சமடைவதை விட கிளர்ச்சி அடைவதை மிகவும் விரும்பினால், ஸ்பூனிங் போன்ற நிலைகள் உங்களுக்கானது. ஒரு பொசிஷனில் இதனை நீங்கள் செய்வதால், நீங்கள் மிக விரைவாக உச்சத்தை அடைய மாட்டீர்கள். மேலும் இதனுடன், உங்கள் கழுத்துக்குப் பின்னால் உள்ள ஈரோஜெனஸ் மண்டலங்கள் போன்ற பகுதிகளையும் இந்த பொசிஷனில் எளிதாக அணுகலாம்.


3. உடலுக்கும் உடலுக்குமான நெருக்கம்


நீங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் ஆழமாகப் பின்னிப் பிணைந்திருப்பதால், உடலுக்கும் உடலுக்குமான தொடர்பு அதிகரிக்கிறது. உங்கள் துணையின் ஒவ்வொரு அங்குலத்தையும் - அணு அணுவாக உணர இது வழிவகை செய்கிறது.


4. கின்க் ப்ளே பிடித்தம் என்றால் அதற்கும் இதில் இடம் உள்ளது
உங்கள் பார்ட்னர் உங்களுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்து படுத்திருப்பதால் உங்களது பிறப்புறுப்பை கைகளால் தொடும் அதே நேரம் உங்களது கழுத்துப் பகுதியில் கடிப்பது அல்லது அந்தப் பகுதியைச் சீண்டுவது போன்ற கிளர்ச்சியூட்டும் செயல்களில் பார்ட்னரால் ஈடுபட முடியும். இருப்பினும் உங்கள் பார்ட்னருக்கு கடிப்பது பிடிக்குமா என்பதை உடலுறவுக்கு முன்பு பேசிப் புரிந்து கொண்டு உறுதி செய்வது நல்லது.