உப்புமா என்றாலே பலருக்கும் பிடிக்காது. அதிலும் ரவா உப்புமா என்றால் ஐயோ உப்புமாவா என அலறும் சிலர் வெறுக்க தொடங்குவார்கள் மிகவும் எளிமையாக செய்ய கூடிய உணவாகும். காலை உணவு அல்லது இரவு உணவாக சிலர் எடுத்து கொள்வார்கள். சிலருக்கு இது சிற்றுண்டியாக எடுத்து கொள்ள பிடிக்கும். காய்கள், நெய், முந்திரி சேர்த்து செய்து சாப்பிட்டால் ருசியாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். உடல் எடை குறைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.


இந்த ரவா உப்புமாவில் எண்ணற்ற பயன்கள் இருக்கிறது. இதை பற்றி தெரிந்து கொள்வோம்.





  • கார்போஹைட்ரெட் நிறைந்தும் கொழுப்பு சத்து குறைந்தும் காணப்படுகிறது. குறைவாக சாப்பிட்டாலே போதுமானது. நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது மேலும் இது சிறந்த ஆற்றல் மூலமாக இருக்கிறது. கார்போஹைட்ரெட் நிறைந்த ஒரு  உணவாகும்.

  • உடல் எடையை குறைக்கும் - ரவாவில் இருக்கும் நார்சத்து ஆனது, நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும். குறைவாக சாப்பிட்டாலே நிறைவாக சாப்பிட உணர்வை தரும். உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இது சிறந்த உணவாக இருக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்கள் உப்புமா சாப்பிட்டால் எடை குறையும். இனிமேலாவது இதை வெறுக்காமல் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்





  • இரத்த சோகை வராமல் தடுக்கும் - ரவாவில் இரும்பு சத்து நிறைந்து இருக்கிறது. இது இரத்த சோகை வராமல் தடுக்கும். இரத்த சோகை என்பது இரும்பு சத்து குறைபாட்டால் வர கூடிய பிரச்சனை ஆகும். உடல் சோர்வு, அசதி, வலி, எதிலும் பெரிய ஈடுபாட்டுடன் இல்லாமல் இருப்பது, மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் இது போன்ற அறிகுறிகள் இருக்கும். இரத்த சோகை பிரச்சனை வராமல் தடுக்க இந்த ரவா உணவில் சேர்த்து கொள்ளுங்கள்

  • ரவாவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் - வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் நார்ச்சத்து பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது.

  • மலசிக்கல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாகும் - ரவாவில் இருக்கும் நார்சத்து மற்றும் ரவா உப்புமாவில் சேர்க்கப்படும் காய்கள் அனைத்தும் நார்சத்து நிரம்பியது. இது செரிமானத்தை தூண்டும். மேலும் மலசிக்கல் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்.





  • ரவா ஆனது உடலில் சேரும் கெட்ட கொழுப்பின் அளவை குறைகிறது. நல்ல ஆரோக்கியமான கொழுப்பு உடலில் சேரும்.


இனிமேல் ரவா உப்புமாவை வெறுக்க மாட்டீர்கள். இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. உப்புமா உடம்புக்கு ரொம்ப நல்லது.


இன்றைய முக்கியச் செய்திகள் சில...