ஊட்டச்சத்து மிகுந்த கருவேப்பிலை:

பெரும்பாலும் கருவேப்பிலையை உணவில் இருந்து தேடி எடுத்து வைக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், இதில் எவ்வளவு மருத்துவ குணம் இருப்பது தெரிந்தாலும் கருவேப்பிலையை சாப்பிடு என்பது அரிதானது. ஆனால், இன்றைய நவீன வாழ்வில் பலரும் ஆர்கானிக் உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் நிலையில், சமையில் மட்டும் கருவேப்பிலை சேர்த்துகொள்ளாமல், தினமும் காலையில் 7-10 கருவேப்பிலை இலைகளை சாப்பிடுவதால் நம் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். 


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா?

பருவகாலங்கள் போல, நம் உடலுக்கும் அவ்வபோது நோய்தொற்று ஏற்படுவது இயல்பானதுதான். அப்படியான பொழுதுகளில் வைரஸ் கிருமிகளை எதிர்த்து எவ்வளவு திறமையாக வெள்ளையணுக்கள் போராடுகிறதோ அந்த வேகத்தில் நமக்கு ஏற்பட்ட உடல்நலக் கேடு காணாமல் போய்விடும். இத்திறனை நோய் எதிர்ப்பு சக்தி என்கிறோம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் காலையில், 7-10 கருவேப்பிலை இலைகளை சாப்பிடலாம். இல்லையெனில், தண்ணீரில் இலைகளை போட்டு, நன்கு கொதிக்க வைத்து வடிக்கட்டிய நீரை பருகலாம். 


எப்படி சாப்பிடுவது?

தினமும் காலையில் எழுந்ததும், 7-10 கருவேப்பிலை இலைகளை நன்கு மென்று திண்று தண்ணீர் குடிக்கலாம். இல்லையெனில், நீர்மோரில் அதிக கருவேப்பிலை உடன் சாப்பிடலாம். இப்படி சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பதுடன் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.


கருவேப்பிலையில் உள்ள சத்துக்கள் என்னென்ன? 

கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சது, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்களால் கண் பார்வைக் கோளாறுகள், சோகை நோய்கள் குணமடைகின்றன.



வயிறு குமட்டல் :

குமட்டலுக்கு கருவேப்பிலை ஆகச் சிறந்த மருந்து. குமட்டலை தடுக்க, கருவேப்பிலை இலைகளை சுத்தமான நீரில் கழுவி, உலர்ந்தப் பின், ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி வறுத்து,  சாப்பிட்டலாம். 


வாய் துர்நாற்றம் :

வாய் துர்நாற்றத்தைப் போக்க, 5 கருவேப்பிலை இலைகளை 5 நிமிடங்களுக்கு பற்களால் நன்கு மென்று துப்பி, வாய் கொப்பளிகளாம். 


வயிற்றுப்போக்கு :

கருவேப்பிலையை மோரில் கலந்து குடிப்பதால் வயிற்றுப் போக்கு குணமாகும்


நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்க:

நீரிழிவு நோயாளிகள் கருவேப்பிலையை சட்னியாக செய்து, சாதம், ரொட்டி என 
எல்லாவற்றுடனும் சாப்பிடுவது நல்லது.


கருவேப்பிலையை சமையிலில் சேர்பதை தவிர, கருவேப்பிலை பொடி, சட்னி, அடை உள்ளிட்டவற்றில் சேர்க்கலாம். கருவேப்பிலையை முழுதாக சாப்பிடுவதை விரும்பாதவர்கள், இட்லி பொடியில் சிறிதளவு கருவேப்பிலையைச் சேர்த்துகொள்ளலாம். 


மோர் உடன் கருவேப்பிலை சேர்த்து சாப்பிடலாம். 


தலைமுடி நரைப்பதை தடுப்பதில் கருவேப்பிலை முக்கிய பங்குண்டு. இப்படி பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால், கருவேப்பிலையை தவிர்காதீர்.