சமையல் செய்யும் போது மனைவி மீது சூடான எண்ணெயை ஊற்றிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் லூதியானவில் நடந்துள்ளது.


சண்டிகர் மாநிலம் லூதியானாவில் தனது மனைவி மீது சூடான எண்ணெயை ஊற்றியதாக அஜய்பால் சிங் என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 31 வயதான பெண், திருமணமான உடனேயே தனது கணவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தத் தொடங்கினார் என்று கூறினார். அவர் தனது மகளுடன் வசிக்கும் அவரது வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது, மேலும் அவர் சமையல் செய்யும் போது சூடான எண்ணெய்யை ஊற்றினார்.


சரபா நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மீது சூடான எண்ணெயை ஊற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி அஜய்பால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


விகாஸ் நகர், பகோவால் சாலையைச் சேர்ந்தவர் சிம்ரன்பிரீத் கவுர். அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அஜய்பாலை மணந்ததாகவும், அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் கூறினார். திருமணம் ஆன உடனேயே கணவர் தன்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், வீட்டை விட்டு வெளியேறி விகாஸ் நகரில் உள்ள தனது மகளுடன் மாமியார் வீட்டில் வசிக்கத் தொடங்கியதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.


கடந்த 23ஆம் தேதி அப்பெண் சமைத்துக்கொண்டிருந்தபோது, ​​​​வீட்டுக்கு வந்த கணவர் கடாயில் இருந்து சூடான எண்ணெயை மீது ஊற்றியுள்ளார். இதனால், அவர் அலறி துடித்து சத்தம் போட்டுள்ளார். உடனே, ​​அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.


இதனைத்தொடர்ந்து, அந்த பெண் மே 24 அன்று மகளிர் உதவி எண்ணில் (1091) புகார் அளித்தார். அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது.


இந்த சம்பவம் குறித்து ஷாஹீத் பகத் சிங் நகர் காவல் நிலையத்தின் பொறுப்பாளர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தர்மிந்தர் குமார் கூறுகையில்,  “அஜய்பாலுக்கு எதிராக சிமர்ப்ரீத் குடும்ப வன்முறைக்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். மேலும் அவர்களது விவாகரத்தும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498-A (வரதட்சணை துன்புறுத்தல்) மற்றும் 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் அவரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண