சரிவிகித உணவே உடல் ஆரோக்கியத்திற்கு முதன்மையானதாக சொல்லப்படுகிறது. அதுவும் உடற்பயிற்சியுடன் கூடிய சத்துமிக்க உணவே நல்ல லைஃப்ஸ்டைல். அப்படியிருக்கு ஒரு நாளைக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பழங்களை சாப்பிட வேண்டும்; இந்த நேரங்களில் பழங்களை சாப்பிட கூடாது என ஆயுர்வேத மருத்துவம் பரிந்துரைப்பவைகள் பற்றி காணலாம்.


காய்கறிகள், இறைச்சியை போலவே தினமும் பழங்கள் டயட்டில் இருக்க வேண்டும். ஸ்நாக்ஸ் டைமில் பழங்களை சாப்பிடுவது நல்லது.


ஒரு நாளிலில் வெவ்வேறு பழங்களை சாப்பிட வேண்டும். சில பழங்களை மட்டும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட முடியும். சிலவற்றை சாப்பிட கூடாது. நார்ச்சத்து கொண்ட பழங்களை காலையில் சாப்பிடலாம். தர்பூசணி, பப்பாளி, கொய்யா, மாம்பழம், மாதுளை, வாழைப்பழம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளலாம்.


காலை உணவு சாப்பிட்டதும் 11 மணி போல ஒரு பவுல் பழங்களை சாப்பிடலாம். காலை உணவுக்கு பதிலாக பழங்கள் சாப்பிட முடிவு செய்தால் அன்னாசி செர்ரி, கிவி, ஸ்ட்ராபெர்ரி , ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பழங்களை சாப்பிடலாம். சாப்பிடவுடன் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


தூங்க செல்வதற்கு முன்பு பழங்களை சாப்பிட கூடாது. இது செரிமான கோளாறுகளை உருவாக்கலாம். உணவுடன் சேர்த்து ஒருபோதும் பழங்களை சாப்பிட கூடாது. அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் காய்கறி, பழங்கள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். தூங்க செல்வதற்கு 2 மணி நேரங்களுக்கு முன்பே பழங்களை சாப்பிட வேண்டும்.


எப்போதும் சொல்லப்படும் ஓன்றுதான். காலை உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு தேவையான முழு ஆற்றலும் காலை உணவில் மட்டுமே இருக்கிறது. மதியம் அதைவிட சற்று குறைவாக சாப்பிடலாம். இரவில் மிகக்குறைந்த அளவே சாப்பிட வேண்டும். சிறுதானியங்கள் கொண்டு செய்த உணவை இரவில் சாப்பிடலாம். சாப்பாட்டு இடையே தண்ணீர் குடிக்கக் கூடாது. இதனால் செரிமானம் தாமதப்படும்.ஆனால், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்கு பிறகே பழங்கள் சாப்பிடலாம்.


சாப்பிட்டதும் தூங்குவதும் நல்ல பழக்கம் அல்ல. தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவு அருந்தலாம். பழங்களை ஜூஸ்-ஆக குடிக்காமல் கடித்து மென்று சாப்பிடுவது நல்லது.


இந்தப் பழங்களெல்லாம் டயட்டில் இருக்கட்டும்


நெல்லிக்கனி:


வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், நோய் தீர்க்கும் நிவாரணி. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் ஒரு சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட். நெல்லிக்கனியில் 80% நீர் சத்தும், புரதம், மாவுச் சத்து, நார் சத்து, வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்களும் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கரோடின், வைட்டமின் பி மற்றும் சி கொண்டதோடு காலிக் அமிலமும் பாலிபீனாலும் உள்ளது.இன்று ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் நெல்லிக்காய், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் மருத்துவ ரிஷிகளான சரகராலும் சுஸ்ருதராலும் தமது மருந்துகளில் பயன்படுத்தப்பட்டது.





அத்திப்பழம்:


தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் கொழுக், மொழுக் என்று வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக உள்ளது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.


மாதுளை:


ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.


பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது