Health Benefits of Plantain Flower: தொற்றினை குணப்படுத்துவது முதல் மாதவிடாயின் சமயத்தில் ஆரோக்கியத்தைப் பார்த்துக்கொள்வது வரை வாழைப்பூவுக்குப் பல பயன் இருப்பதாகச் சொல்கிறார்கள் நிபுணர்கள். 


வாழைப்பூவில் உள்ள எத்தனால் உடலில் பாக்டீரியா உண்டாவதைக் கட்டுப்படுத்தும்.


நன்கு சமைத்த வாழைப்பூ வயிற்று வலியைக் குறைத்து மாதவிடாய் ரத்தப் போக்கையும் குறைக்கும். 


மேலும் ஜர்னல் ஆஃப் ஃபுட் அண்ட் அக்ரிகல்சர் எனப்படும் இதழில் வெளியான கட்டுரையின்படி ரத்தத்தைன் சர்க்கரையின் அளவை வாழைப்பூ கட்டுப்படுத்தும்.கூடுதலாக அதில் இருக்கும் மக்னீஷியம் மனப்பதட்டத்தைத் தனிக்கும்.இயல்பாகவே இவற்றுக்கு மன அழுத்தத்தைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
மேலும் இதில் இருக்கும் ஃபீனாலிக் ஆசிட், டானின்ஸ், ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் இதர ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் திசுக்கள் பாதிப்பதைத் தடுத்து இதயநோய் மற்றும் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களில் பால்சுரப்பை இது அதிகரிக்கும். மேலும் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் வயதாவதைக் கட்டுப்படுத்தும்.  கூடுதலாக சிறுநீரகத்தின் செயல்பாட்டையும் இது சீராக்கும்.
ரத்தத்தில் இரும்புச்சத்தின் அளவை இது அதிகரிக்கும் எனக் கூறுகின்றனர் நிபுணர்கள்.


வாழைப்பூவில் என்னவெல்லாம் சமைக்கலாம்?