ஈத்-அல்-அதா அல்லது ஈத்-அல்-ஜுஹா என்றும் அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான இஸ்லாமிய பண்டிகைகளில் ஒன்றாகும். இது முஸ்லீம் சமூகத்தில் பெரும் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இப்ராஹிம் நபி தனது மகனான இஸ்மாயிலை அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து பலியிடத் தயாராக இருந்ததை இந்த பண்டிகை நினைவுபடுத்துகிறது.


பக்ரீத் 2023 


இஸ்லாத்தின் ஐந்து தூண்களின் ஒருங்கிணைந்த அங்கமான மக்காவுக்கான வருடாந்திர ஹஜ் யாத்திரையை முடிப்பதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பமாக ஈத்-அல்-அதா கருதப்படுகிறது. இது இப்ராஹிம் நபியின் அசைக்க முடியாத பக்தியை சுட்டிக்காட்டுகிறது. இப்ராஹிம் நபிகள், அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க அவரது மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய துணிந்த கதையை நினைவுகூரும் பண்டிகையாக இது உள்ளது. இறைத்தூதர் இப்ராஹிம் தியாகம் செய்யத் தயாரானபோது, கடவுள் அதில் தலையிட்டு, அவரது மகனுக்குப் பதிலாக ஒரு மாற்றுத் தியாகத்தை செய்ய அனுமதி அளித்தார். 



பக்ரீத் குர்பானி


உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்கள் கடவுளுக்கு குர்பானி கொடுப்பதற்காக, ஒட்டகம், மாடு, ஆடு அல்லது செம்மறி ஆடு போன்ற விலங்குகளை பலியிடுவதன் மூலம் இந்த நாளை நினைவு கூருகிறார்கள். பலியிடப்பட்ட விலங்கின் இறைச்சி பின்னர் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அதில் ஒரு பங்கு தனிநபர் அல்லது குடும்பத்திற்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஒரு பங்கும், மற்றும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு பங்கும் கொடுக்க வேண்டும். இந்த பகிர்தல் தாராள மனப்பான்மை மற்றும் இரக்க உணர்வை வலுப்படுத்துகிறது.


தொடர்புடைய செய்திகள்: WI vs NED WC Qualifiers: வெ. இண்டீசை புரட்டி எடுத்த நெதர்லாந்து..சூப்பர் ஓவரில் 30 ரன்கள் விளாசி அபார வெற்றி..!


ஒவ்வொரு பகுதியிலும் தேதி மாறுபடும்


பக்ரீத் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இது குறிப்பிட்ட தேதிகள் சந்திரனைப் பார்க்கும் அடிப்படையில் மாறுபடும். இதன் விளைவாக, பக்ரீத்-இன் தேதி கிரிகோரியன் நாட்காட்டியில் ஆண்டுதோறும் மாறுபடும். இஸ்லாமிய நாட்காட்டி சூரிய அடிப்படையிலான கிரிகோரியன் நாட்காட்டியை விட தோராயமாக பதினொரு நாட்கள் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, ஒவ்வொரு ஆண்டும், ஈத் அல்-ஆதா உலகின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு கிரிகோரியன் தேதிகளில் வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் நிலவு தோற்றம் மாறுபடும் என்பதால், பிராந்திய மரபுகளின் அடிப்படையில் தேதிகள் மாறுபடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.



பக்ரித் 2023 தேதி


சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), கத்தார், குவைத், ஓமன், ஜோர்டான், சிரியா, ஈராக், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பக்ரீத் கொண்டாட்டங்கள் ஜூன் 28, 2023 புதன்கிழமை அன்று தொடங்கும். ஹஜ்ஜின் முக்கிய சடங்கான அரபாத் தினம், ஜூன் 28, 2023 புதன்கிழமை அன்று அனுசரிக்கப்படும். இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, ஜப்பான், ஹாங்காங், புருனே சுல்தானகம் மற்றும் பிற தெற்காசிய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் ஜூன் 29, 2023 அன்று பக்ரீத்தை கொண்டாடுவார்கள்.