அண்மையில் வைரலான க்யூட் வீடியோவில் ஆட்டைப் பின்பற்றும் குட்டி காண்டாமிருகத்தின் சேட்டை சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. நட்புக்கு இனம், மதம், மொழி அல்ல, ஏன் ஆட்டுக்குட்டியும் காண்டாமிருகமுமாக இருந்தால் கூடத் தடைகள் தெரியாது என்பதை நிரூபிக்கிறது அந்த 14 நொடி வீடியோ இதுவரை 2.3 மில்லியன் பார்வைகளைக் குவித்துள்ளது.
பதினான்கு வினாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு ஆடு காண்டாமிருகத்தின் முன் துள்ளுவதைக் காணலாம். ஆட்டைப் பார்த்ததும், குட்டி காண்டாமிருகமும் அதைப் பின்பற்றத் தொடங்குகிறது. ஒரு குட்டி காண்டாமிருகத்துக்கும் ஆட்டுக்குமிடையிலான இந்த ஆரோக்கியமான தருணம் உங்களை குதுகலமாக்கும் துள்ளிக் குதிக்க வைக்கும்...வீடியோவைக் காண மேலே உள்ள லிங்க்கைக் க்ளிக் செய்யவும்.
முன்னதாக,
இளம் பெண் சிங்கம் ஒன்று , வழியில் இருந்து தடுமாறி வரும் பிறந்து சில நாட்களே ஆன காட்டு எருமைக்குட்டியை வேட்டையாட இயல்பாக வந்துகொண்டிருக்கிறது. இதையெல்லாம் அறியாத எருமைக்குட்டி சிங்கத்தை கண்டு அஞ்சாமல் இயல்பாக நடந்து செல்கிறது. சிங்கம் எருமைக்குட்டியை தாக்க தயாராகும்பொழுது , எங்கிருந்தோ வேகமாக வந்த அதன் தாய் எருமை ஓடி வந்து சிங்கத்தை விரட்டி ஆபத்தில் இருக்கும் தனது குட்டியை காப்பாற்றுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதேபோல, குட்டி யானை ஒன்றை சிங்கக் கூட்டம் மொத்தமாக தாக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகிவருகிறது. ஆனால் இறுதியில் வென்றது என்னவோ யானைதான். Susanta Nanda IFS என்பர் டிவிட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில் சிங்கங்கள் ஒன்றாக சேர்ந்து யானையை தாக்குகிறது. ஓர் நதிக்கரையில் குட்டி யானையை 14 சிங்கங்கள் சேர்ந்து விரட்டுகின்றன. இதை "ஒற்றை யானை 14 சிங்கங்களை எதிர்த்து வெற்றி பெறுகிறது... யார் காட்டிற்கு ராஜா? என்ற வாசகத்துடன் பகிர்ந்துள்ளார். இதற்கு பல லைக்குகள் குவிந்து வருகின்றன. டிவிட்டரில் பலர் இதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.