செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கழனிபாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மணி மனைவி சுதமதி வயது 25. இருவரும் காதலித்து 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டு மதுராந்தகம் கழனிபாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும் மற்றும் இரண்டு வயதில் மற்றொரு ஆண் குழந்தையும் உள்ளது. 

 



இந்நிலையில் சுதமதி மற்றும் ரஞ்சித் குமார் ஆகிய தம்பதி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டையிட்டுக் கொள்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சுதமதி, துணிகள் அயன் செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கணவன் ரஞ்சித் குமார் கூறியுள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து காவல்துறையினருக்கு தெரிந்தால், உயிரிழந்த சுதமதி உடலை உடல்கூறாய்வு செய்வார்கள் எனவும், அதற்குள் நாம் இறுதி சடங்கு செய்து விடலாம் எனவும் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து உயிரிழந்த சுதமதி உடலுக்கு அவசர அவசரமாக, இறுதிச் சடங்கு செய்ய   முயற்சி செய்துள்ளார்கள்.

 



ஆனால், அதற்குள் சுதமதியின் உறவினர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது.  ரஞ்சித்தின் மனைவி கணவரால், அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என சந்தேகத்தின் பேரில், பெண்ணின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், சுதமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



 

 

தாக்கப்பட்ட மனைவி..

 

 

அப்பொழுது, சுதமதியின் தலையில் பலமாக தாக்கப்பட்ட காயம் இருந்துள்ளது. மருத்துவரின் முதல் கட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில், மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித் குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், ரஞ்சித் குமார் வேலையை முடித்து வீட்டுக்கு வரும்பொழுது,  சுதமதி யாருடனோ போனில் பேசியிருந்ததை கண்டு பலமாக தாக்கியுள்ளார். தலையில் பலத்த காயமடைந்த சுதமதி உயிரிழந்தார் என விசாரணையில் கூறியுள்ளார் கணவர் ரஞ்சித். இதனை அடுத்து மதுராந்தகம் காவல்துறையினர், ரஞ்சித்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சந்தேகத்தின் பெயரில் கணவன் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.