உடல் நலம் சீராக இருக்க வேண்டும் என்றால் குடல் நலம் முக்கியம். அதற்கு ஆரோக்கியமான உணவும், உடற்பயிற்சியும் அவசியும். சில வாழ்க்கை முறையும் குடல் நலத்திற்கு அவசியம்.
இது குறித்து ஆயுர்வேத நிபுணரான மருத்துவர் டிக்சா பாவ்சா கூறியிருப்பதாவது:
அதில் அவர் ஐந்து விஷயங்களை நாம் தவிர்த்தாலே நம் குடல் நலமும் உடல் நலமும் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
”அதில் முதலாவதாக இடம் பெற்றிருப்பது உணவுக்குப் பின்னர் குளியலாடக் கூடாது என்பது. இரண்டாவதாக உணவுக்குப் பின்னர் நடைப்பயிற்சி செய்யக்கூடாது. மூன்றாவது முக்கியமான அறிவுரை மதியம் 2 மணிக்குப் பின்னர் உணவு உண்ணுதல், 4வது தவறு இரவு உணவில் தயிர் உண்பது கடைசி மற்றும் 5-வது தவறு சாப்பிட்டவுடன் உறங்குவது. இந்த ஐந்து தவறான பழக்கங்களும் நம் மீது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றும் அவர் விளக்கியுள்ளார்.
1. உணவுக்குப் பின் குளித்தல் கூடாது. அதுவும் 2 மணிநேரத்துக்கு அதை செய்யவே கூடாதாம். காரணம் உணவு செரிமானம் ஆக நம் உடலில் உள்ள ஃபையர் எனர்ஜி தேவை. உணவு உண்ட பின்னர் ஃபயர் எலமன்ட் வேலை செய்ய ஆரம்பிக்கும். ஆனால் அப்போது நாம் குளித்தால் வெப்பம் குறைந்து ஜீரணமாவது தடைபடும்.
2. உணவு அருந்தியவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டால், நீச்சல் பயிற்சி செய்தால் ஜீரணமாவது பாதிக்கப்படு வயிறு உப்புசம் பெறும். மேலும் உணவின் சத்துக்கள் உடலில் சேராமல் போய்விடும்.
3. மதியம் 2 மணிக்குப் பின்னர் உணவருந்தக் கூடாது. காரணம் அது சூரியன் உச்சத்தில் இருக்கும் நேரம். அப்போது உடலில் பித்தம் உச்சத்தில் இருக்கும். அதனால் ஆயுர்வேத மருத்துவத்தின்படி அது உணவு உண்பதற்கு சற்றும் உகந்த நேரம் இல்லை. மதிய உணவானது மிதமானது முதல் சற்று பிரம்மாண்டமானதாக இருக்கலாம்.
4. இரவில் தயிர் சாப்பிட்டால் அது கபம், பித்தத்தை அதிகரிக்கும். அதனால் குடல் நலம் பாதிக்கப்படும். மல இறுக்கம் ஏற்படலாம்.
5. உணவுக்குப் பின் தூங்கக் கூடாது. உணவுக்கும் உறக்கத்துக்கும் இடையே குறைந்தது மூன்று மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும். தூக்கத்தின் போது தான் உடல் புத்துணர்வை மீட்டெடுக்கும் எல்லா வேலைகளையும் செய்யும். அதனால் இரவில் லகுவான உணவு அதுவும் தூக்கத்துக்கு 3 மணி நேரத்துக்கு முன்னர் சாப்பிட வேண்டும்.
இவ்வாறு அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.