காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம்  நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்தில் நடித்துள்ள நடிகர் சமந்தாவின் பிறந்தநாளும் நேற்றுதான். இதையொட்டி ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் கேள்வி பதில் நேரத்தில் உரையாடினார். அப்போது பேசிய அவர், படத்தில் தனது கதாப்பாத்திரத்தை வரவேற்ற ரசிகர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கதீஜா கதாபாத்திரத்திற்கு பார்வையாளர்களின் வரவேற்பை தனது சிறந்த பிறந்தநாள் பரிசு என்று அழைத்த அவர், நயன்தாராவுடனான தனது நட்பைப் பற்றியும் பேசியுள்ளார், "நயன்தாரா, அவரைப் போல யாரும் இல்லை. அவர் உண்மையானவர், மிகவும் விசுவாசமானவர் மேலும் நான் சந்தித்த கடினமான உழைப்பாளிகளில் அவரும் ஒருவர்” எனக் கூறியுள்ளார்.









 முன்னதாக, திரைப்படங்கள் குறித்தும், சொந்த வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை அவர் ஷேர் செய்திருந்தார். குறிப்பாக தற்போது தமிழில் நடித்து வெளியாகி இருக்கும்  காத்து வாக்குல ரெண்டு காதல் படம் குறித்து அதிகம் பேசியிருந்தார். அதில், நயன் தாரா நட்பு குறித்து பேசிய சமந்தா, நயன் ஒரு தனித்துவமான ஆள். காத்து வாக்குல படத்தை காண ஆர்வமாக இருக்கிறேன். சிறப்பாக அவர் பணியாற்றியுள்ளார் என்றார். மேலும், விக்னேஷ் சிவன் பற்றிய கேள்விக்கு ''விக்னேஷ் ஒரு அழகான திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.


அவர் மனதையும் ஆன்மாவையும் இந்தப்படத்தில் போட்டுள்ளார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடையும். காண, ஆவலாக காத்திருக்கிறேன்'' என்றார். விஜய் சேதுபதி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கையில் ஹார்ட்டின் விட்டு தன் அன்பை பகிர்ந்துள்ளார் சமந்தா. அதேபோல தான் பார்த்த முதல் திரைப்படம் ஜுராசிக் பார்க் என்றும், தன்னுடைய முதல் சம்பளம் ரூ.500 என்றும் தெரிவித்தார். பள்ளியில் படிக்கும் போதே பார்ட் டைம் வேலையாக ஹோட்டலில் நடக்கும் விழாக்களை தொகுத்து வழங்கினேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.