சர்க்கரைக்கு மாறாக செயற்கை இனிப்பூட்டியாக பயன்படுத்தப்படும் அஸ்பார்டேம் என்ற பொருள் புற்றுநோயை ஏற்படுத்துமா என்ற  ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 


சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பு சுவை அதிகம் உள்ள அஸ்பார்டேம் என்ற அமினோ அமிலங்கள், கலோரிகளை குறைக்கும் ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோர் அஸ்பார்டேம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வார்கள். டயட் உணவில் சர்க்கரை பயன்படுத்தாமல் இருக்க அஸ்பார்டேம் பயன்படுகிறது.


1965ம் ஆண்டு காயங்களை குணப்படுத்தும் மருந்துகளை கண்டுப்பிடிக்க முயற்சித்தபோது, தவறுதலாக கிடைத்த ஒரு பொருள் தான் அஸ்பார்டேம். அதிக இனிப்பு சுவை மிகுந்த இந்த பொருள் 1980ம் ஆண்டுகளில் இருந்து பயன்பாட்டுக்கு வந்தது. அஸ்பார்டேம்களை உணவுப்பொருட்களில் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியங்கள் அனுமதி அளித்தன. 


சர்க்கரைக்கு மாற்றாக அதிக இனிப்பு சுவை கொண்டதாக பார்க்கப்பட்ட அஸ்பார்டேம் டயட் கேக், கோகோ கோலா, பெப்சி, 7up, பற்பசை, சுவிங்கம், யோகர்ட், டானிக்குகள்  உள்ளிட்ட சுமார் 6000 பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செயற்கை இனிப்பூட்டியாக பார்க்கப்படும் அஸ்பார்டேமில் புற்றுநோய் ஏற்படுவதற்கான மூலக்கூறுகள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தது. இதனால் அஸ்பார்டேம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. 


கடந்த ஆண்டு பிரான்சில் சுமார் ஒரு லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிகளவில் அஸ்பார்டெம் செயற்கை இனிப்புகளை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரும் ஆபத்துகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இத்தாலியில் எலிகளுக்கு அஸ்பார்டெம் கொடுத்து நடத்தப்பட்டு ஆய்விலும், புற்றுநோய் பாதித்த எலிகளுக்கு கொடுக்கப்பட்ட உணவில் அஸ்பார்டேம் இருந்தது காரணம் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமும், உலக சுதாகார நிறுவனமும் நடத்திய ஆய்வில் அஸ்பார்டேமில் புற்றுநோயை உண்டாகும் கார்சினோஜெனிக் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதும், தலைவலி, நரம்பியல் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் சுவையூட்டிகளின் மீதான நம்பகத்தன்மை மீது கேள்வி எழுந்துள்ளது.



உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் போது அவற்றில் சுவை கூட்டிகள் உள்ளிட்ட கூடுதலாக சேர்க்கப்படும் பொருட்கள் பாதுகாப்பானதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Eye Flu : கண் எரிச்சலா? சாதாரணமாக நினைத்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. இந்த அபாயங்கள் இருக்கு..


“மனசோர்வு இருந்தால் சாதாரணமாக விட வேண்டாம்; புற்றுநோய்க்கு வாய்ப்பு” - மருத்துவர்கள் எச்சரிக்கை


காலுக்கு கீழ் மேகங்களை பார்க்க வேண்டுமா… இதய வடிவ ஏரி வேண்டுமா… உடனே கிளம்புங்க வயநாட்டிற்கு!