நமது உடல் தொப்பை போடும்போது அதனைக் குறைக்கப் போராடும் எவருக்கும் அதை அகற்றுவது எவ்வளவு கடினம் என்பது தெரியும். நொறுக்குத் தீனிகளை குறைப்பது முதல் சில உடற்பயிற்சிகளை செய்வது வரை சில நமக்குப் பலன் அளிக்கிறது என்றாலும் ஆனால் பல நேரங்களில் நம்மால் அதனை தொடர்ச்சியாகப் பின்பற்ற முடிவதில்லை. வயிற்று கொழுப்பைக் குறைக்க நாம் கடுமையான உடற்பயிற்சிகள் செய்கிறோம். ஆனால் உணவும் முக்கியம். வெறும் உணவுப் பழக்கங்கள் வழியாக அதனை சரிசெய்யலாம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?  தட்டையான வயிற்றைப் பெற சாப்பாட்டை சரி செய்வது மட்டுமே போதுமானது என்பதை ஆய்வின் வழியாகக் கண்டறிந்துள்ளனர்...






ஜர்னல் ஆஃப் ஓலியோ சயின்ஸில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு, ஆப்பிள் சாறு சில வாரங்களில் தொப்பையை "குறிப்பிடத்தக்க வகையில்" குறைக்கும் என்று கூறுகிறது. ஆப்பிளில் இருந்து பெறப்பட்ட பாலிபினால்களை நீண்டகாலம் உட்கொள்வதன் பலனை ஆராய ஆய்வை மேற்கொண்ட பின்னர் ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
மொத்தம் 124  பேர் பங்கேற்ற இந்த ஆய்வில் நபர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு நாளும், ஒரு குழுவிற்கு சுமார் 340 கிராம் பாலிபினால் நிறைந்த ஆப்பிள் பானங்கள் வழங்கப்பட்டன, மற்ற குழு பாலிபினால்கள் இல்லாத பானங்களை உட்கொண்டது. 12 வாரங்களுக்குப் பிறகு, ஆப்பிள் உட்கொண்ட குழுவில் உள்ளவர்களின் உள்ளுறுப்பு கொழுப்புப் பகுதி (VFA) கணிசமாகக் குறைந்துள்ளது கவனிக்கப்பட்டது. இதன் மூலம் ஆப்பிள் சாறு உடல் எடையை குறைப்பாக தொப்பையை குறைக்க உதவும் எனக் கண்டறியப் பட்டுள்ளது.தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரே தேவை இல்லை என்கிற பழமொழி உண்மைதான் போல!