நல்ல நேரம்:


காலை 11.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


கௌரி நல்ல நேரம்:


மதியம் 1.30 மணி முதல் காலை 2.30 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு:


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


குளிகை:


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


எமகண்டம்:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


உடன்பிறந்தவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சபை சார்ந்த துறைகளில் பொறுமையை கையாள வேண்டும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.


ரிஷபம்


சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்காலம் நிமிர்த்தமான இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். செலவு நிறைந்த நாள்.


மிதுனம்


உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பழக்கவழக்கம் தொடர்பான விஷயங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.


கடகம்


உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதில் இருக்கக்கூடிய விஷயங்களை வெளிப்படுத்துவதில் சிந்தித்து செயல்படவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.


சிம்மம்


எந்தவொரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத திடீர் திருப்பம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.


கன்னி


உறவினர்களுடன் சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். கூட்டாளிகளின் வழியில் அனுசரித்து செல்லவும். சமூகம் தொடர்பான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். தவறிப்போன சில பொருட்களை பற்றிய தகவல்கள் கிடைக்கும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.


துலாம்


குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மற்றவர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். சவாலான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். தாய்மாமன் வழியில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார ரீதியான புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். பகை விலகும் நாள்.


விருச்சிகம்


நண்பர்களின் ஆலோசனைகளின் மூலம் மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை ஏற்படும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மறதி குறையும் நாள்.


தனுசு


உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பூமி விருத்தி தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மாணவர்களுக்கு கற்றல் திறனில் புதுவிதமான சூழல் ஏற்படும். உங்களின் மறைமுக திறமைகளின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.


மகரம்


தனவரவில் இருந்துவந்த இழுபறியான சூழல் நீங்கும். நண்பர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். புதிய கலை சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். வசதி வாய்ப்புகள் மேம்படும். முகத்தில் பொலிவும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பொறுமை வேண்டிய நாள்.


கும்பம்


குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். தனவரவுகளின் மூலம் சேமிப்பு மேம்படும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் குழப்பம் குறையும். சலனம் நிறைந்த நாள்.


மீனம்


எதிர்பாராத சில பயணங்களின் மூலம் உடல் ஆரோக்கியத்தில் சோர்வும், மந்தநிலையும் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் குறையும். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் விலகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.