தேங்காய் கோவிலுக்கு உடைக்கும் பூஜை பொருள் மட்டுமில்லை, இதனைத் தினமும் நம்முடைய உணவு முறையில் சேர்க்கும் போது இதய ஆரோக்கியம், உடல் எடை குறைப்பு போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக உள்ளது.


இயற்கை தந்த வரப்பிரசாதங்களில் ஒன்று தான் தேங்காய். கோவில் பூஜை பொருள்கள் தொடங்கி வீட்டில் சமையலறையிலும் தேங்காயின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. சாம்பார், அவியல், பொரியல், தேங்காய் பால் சாதம் போன்ற பலவற்றிற்கு சுவைக்காகப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் சுவையை விட உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் நமக்கு கிடைக்கின்றது என்பது யாருக்கும் தெரியுமா? ஆம் தேங்காயில் புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்களும் வைட்டமின் சி, அனைத்து வரை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நாச்சத்துக்கள் போன்ற உடல் இயக்கத்துக்கு ஆரோக்கியமான அனைத்து சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன.


இப்படி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள தேங்காயை இரவு தூங்கும் முன் சாப்பிடும் வந்தால் உடலில் தேவையில்லாத பிரச்சனை ஏற்படாது. மேலும் பல்வேறு உடல் ஆரோக்கியத்தையும் நாம்  பெற முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் பாரம்பரிய மருத்துவத்தில் தேங்காய்  நீண்ட காலமாக பயன் படுத்தப்பட்டுவருதாக வரலாறுகள் உள்ளன. எனவே இந்நேரத்தில் தேங்காயை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? என்பது குறித்து நாமும் இங்கே அறிந்துக்கொள்வோம்.



மலச்சிக்கலுக்குத் தீர்வு:  


பச்சைதேங்காயில் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்க உதவியாக உள்ளது. எனவே இதனை தினமும் சாப்பிடும் போது எவ்வித மாத்திரை மருந்துகள் எடுக்காமல் இயற்கையான முறையில் மலச்சிக்கலை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.


இதய ஆரோக்கியம்:


பொதுவாக தேங்காய் சாப்பிடும் போது உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்த உதவியாக உள்ளது. எனவே இரவு தூங்கும் முன்பு அல்லது ஏதாவது ஒரு வேளைகளில் தேங்காய் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டால், இதய ஆரோக்கியம் மேம்படும். இதோடு இதயம் தொடர்பான பிரச்சனைகளைக் குறைப்பதற்கு உதவியாக உள்ளது.


உடல் எடை குறைக்க உதவும்:


தேங்காயில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகளவில் உள்ளன. இது உங்கள் உடலில் கொழுப்பை எரிக்க உதவுகிறது. மேலும் தேங்காய் சாப்பிடும் போது வயிறு நிறைந்ததுப்போல் நாம் உணர்வோம். எனவே தேவையற்ற நொறுக்கு தீனிகள் சாப்பிடும் என்ற எண்ணம் வராது. இதனாலே நம் உணவில் டயட்டாக எடுத்துக்கொண்டு உடல் எடையைக்குறைக்கலாம்.



இளமைத் தோற்றமளிக்க உதவும்:


தேங்காய் சாப்பிடுவதால் பல தோல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவியாக உள்ளது. மேலும் இதனை நம்முடைய உணவு முறையில் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் போது தோல் ஆரோக்கியத்துடன் இருக்க உதவியாக உள்ளது. மேலும் நம் இளமைப் பருவத்தில் தோல் சுருங்காமல் இருப்பது போல,  வயதானலும் அதேப்போன்று இருக்க வேண்டும் என்றால் தேங்காய் சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.


தூக்கமின்மை பிரச்சனைக்குத் தீர்வு:


இன்றைய காலக்கட்டத்தில் தூக்கமின்மை பிரச்சனை என்பது பலரும் பொதுவானதாகிவிட்டது. சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். எனவே நாம் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தேங்காய்ப்பால் சாப்பிட்டால் நல்ல தூக்கும் வரும். இனி தூங்குவதற்காக மாத்திரைகள் சாப்பிடுவதற்குப் பதில், கொஞ்சம் தேங்காய் பாலை எடுத்துக்கொள்ளுங்கள்.



இதுபோன்ற ஏராளமாக நன்மைகளை தேங்காயை நம் உணவு முறையில் சேர்த்துக்கொள்வதால் பெறமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால் அதற்காக அளவுக்கு அதிகமாக  சாப்பிடக்கூடாது எனவும் அளவோடு தேங்காயை எடுத்துவருவது ஆரோக்கியமாக வாழ்வதற்கு சிறந்த தீர்வாக அமையும்  என்று கூறப்படுகிறது.