தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களுள் ஒருவர் பா.ரஞ்சித். உதவி இயக்குநராக இருந்து , இயக்குநர் வெங்கட் பிரபு குழுவினருடன் இணைந்து சென்னை 28 திரைப்படத்தில் ஸ்டோரி போர்ட் உறுப்பினராக பணியாற்றினார். அதன் பிறகு கார்த்தி நடிப்பில் உருவான மெட்ராஸ் திரைப்படத்திற்கே வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 படம்தான் முக்கியமான காரணமாம். எப்போது படிக்காத , ஊதாரியாக சுற்றும் இளைஞர்களின் வாழ்வியலே வட சென்னை இளைஞர்களாக காட்டி வரும் சூழலில் அங்கும் படித்த இளைஞர்கள்தான் அதிகம் இருக்கின்றனர் என்பதை காட்டும் விதத்தில் தான் மெட்ராஸ் படத்தை கையில் எடுத்ததாக கூறும் பா.ரஞ்சித் தனது முதல் படமான அட்டக்கத்தில் திரைப்படத்தின் கதை உருவான சுவாரஸ்யம் குறித்து பகிர்ந்துள்ளார்.
பா.ரஞ்சித் கல்லூரியில் படிக்கும் சமயங்களில் அவருக்கு ஒரு நண்பர் இருந்தாராம். அவர் எப்போதுமே ஏதாவது ஒரு பெண் பின்னால் சுற்றிக்கொண்டிருப்பாராம். அந்த பெண் காதலிக்க மறுத்துவிட்டால் , பா.ரஞ்சித்திடமே வந்து “ அவ சரியான மொக்க ஃபிகர் மச்சி “என கூறுவாராம் . மேலும் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் சமயங்களில் ஏதேனும் பெண்ணை கண்டால் , அப்படியே அந்த பெண் பின்னால் சென்று விடுவாராம். அப்படியான தருணங்களில் ரஞ்சித் பயன்படுத்திய வார்த்தைதான் அட்டக்கத்தியாம். சரி இதனை கதைக்களமாக கொண்டு ,இப்படியாக வேறு யாராவது இருக்கிறார்களா என களத்தில் இறங்கிய பா.ரஞ்சித்திற்கு பிறகுதான் தெரிந்திருக்கிறது.
எல்லா இளைஞர்களுமே அட்டக்கத்தியாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்று.” நானும் அட்டக்கத்தியாகத்தான் இருந்தேன் “ என்கிறார் ரஞ்சித். இப்படியான இளைஞர்கள் காதலை கொண்டாட்டமாக பார்க்கிறார்கள் என்னும் ரஞ்சித் , அந்த பெண்ணுக்காக அவன் நடை, உடை என தன்னை மேம்படுத்த தொடங்குவதில்தான் இந்த கொண்டாட்டம் துவங்குகிறது என்கிறார். இதை எல்லாம் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அட்டக்கத்தி படத்தை எடுத்தாராம் ரஞ்சித்.
அட்டக்கத்தி படத்தை பொருத்தவரையில் நான் இயக்குநர் இல்லை. தொகுப்பாளன் என சொல்லிக்கொள்ளவே விரும்புகிறேன் என்கிறார் ரஞ்சித். ரஞ்சித் மெட்ராஸ் திரைப்படத்திற்கு பிறகு எடுத்த படங்கள் அனைத்துமே சமுதாய சிந்தனை கொண்ட கருத்துகள் அடங்கிய படமாக பார்க்கப்படுகிறது. இதனை சிலர் அடையாள அரசியல் என்றும் விமர்சித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க எப்போதான் மீண்டும் காதல் சப்ஜெக்டை கையில் எடுக்க போகிறார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு , கடந்த ஆண்டு இறுதியில் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்தார் ரஞ்சித். நட்சத்திரம் நகர்கிறது என பெயர் வைக்கப்பட்ட அந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையாம் . ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும் காதலை தாண்டி , பல்வேறு கோணங்களில் அப்படம் காதலை உயர்த்தி பிடிக்கும் என்கிறார் ரஞ்சித்.