தற்போதைய காலக்கட்டத்தில் ஏராளமானோர் வீட்டினுள் செடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். நாம் வாழும் இடங்களில் தாவரங்களை வளர்ப்பதனால் நமக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும் என கூறப்படுகிறது. வீட்டினுள் வளர்க்கப்படும் தாவரங்கள் அறையின் அழகியலை மேம்படுத்துகின்றன.  இது மென்மையான மற்றும் மகிழ்ச்சியான உணர்வை தருகின்றன.


துளசி போன்ற சில தாவரங்களை வீட்டில் வளர்த்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும்,  தூக்கத்திற்கு நல்லது என்றும் கூறப்படுகிறது.  நேர்மறை ஆற்றலுக்காக உங்கள் வீட்டில் துளசியுடன் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய செடிகள் குறித்து பார்க்கலாம். 


கற்றாழை


கற்றாழை ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது.  உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் இது முக்கிய பங்காற்றுகிறது. காற்றின் தரத்தை அதிகரிக்க, உங்கள் முற்றத்தில் துளசி செடியுடன் கற்றாழையை நடுவது நல்லது. கற்றாழை மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதாகவும், ஆரோக்ய வாழ்வுக்கு நன்மை பயக்கும் என்றும் கூறப்படுகிறது. 


மல்லிகைப்பூ


மல்லிகை, அதன் நறுமணத்திற்கு பெயர் பெற்றது. ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. மல்லிகைப் பூ மற்றும் அதன் எண்ணெய் இரண்டும் நேர்மறையான விளைவுகளை கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த பூக்கள் மற்றும் எண்ணெய்களின் வசீகரிக்கும் வாசனை மனதை புத்துணர்வாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மல்லிகையின் நறுமணத்தை ஒரு நாளைக்கு 4-5 முறை சுவாசிக்க வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.


லாவெண்டர்


மருத்துவ குணங்கள் நிறைந்த லாவெண்டர், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அதிசய தாவரமாக கருதப்படுகிறது. துளசியுடன் லாவெண்டரை நடவு செய்வது அதன் வளர்ச்சியை துரிதப்படுத்தும். லாவெண்டரின் நறுமணம் கவலை மற்றும் தூக்கமின்மையைப் போக்க  பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. 


பிராமி


Bacopa monnieri என்று அழைக்கப்படும் பிராமி, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என கூறப்படுகிறது.  இந்த மூலிகை, நினைவாற்றல் மற்றும் மன நலனுக்கு  நன்மை பயக்கும் என கூறப்படுகிறது. நீங்கள் பலவீனமான நினைவாற்றல் அல்லது மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டால், இந்தக் கவலைகளைத் தீர்க்க பிராமியைப் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.