புதுச்சேரி: தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருகிறோம் என்று இணைய வழி மோசடிக்காரர்கள் சொன்னதை நம்பி நம்பி 6 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை இழந்தார்.


திருச்சியை சேர்ந்த மருத்துவர் மித்திரன் என்பவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மருத்துவருக்கு ஆன்லைனில் நீங்கள் முதலீடு செய்தால் தினம் தினம் உங்களுக்கு நிறைய வருவாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று வந்த வாட்ஸ் அப் பக்கத்தில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை நம்பிய மித்திரனும் இணைய வழி மோசடிக்காரர்கள் அனுப்பிய டெலிகிராம் லிங்க் மூலம் கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகளில் 6 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். அப்போது அவரது மொபைல் போனுக்கு தங்களது வங்கி கணக்கில் 10 லட்ச ரூபாய்க்கு மேல் இருப்பதாக காட்டியுள்ளது. இதனை பார்த்து மகிழ்ச்சியடைந்த உதவி பேராசிரியரும் பணத்தை எடுக்க முயன்ற பொழுது பணத்தை எடுக்க முடியவில்லை என்று வந்துள்ளது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உதவி பேராசிரியர் நேற்று (29.07.23) கொடுத்த புகாரின் பேரில் இணைய வழி காவல் ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.


மேலும், தவளகுப்பத்தைச் சேர்ந்த துர்க்கேஷ் என்பவர் கப்பலில் வேலை வாய்ப்பு இருக்கிறது என்று வாட்ஸ் அப் வழியாக வந்த தகவலை நம்பியுள்ளார். தொடர்ந்து இது உண்மை என நம்பி 1,60,000 ரூபாய் பணத்தை கடந்த 24.7.2023 அன்று செலுத்திய பிறகு இன்று வரை மேற்கண்ட நிறுவனத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்காததால் தான் ஏமாந்ததை உணர்ந்துள்ளார். இதையடுத்து, அவர் கொடுத்த புகாரின் பேரில் இணையவழி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முதலியார் பேட்டை சேர்ந்த ஹரிஹரன் என்பவருக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு இருக்கிறது மேலும் இலவச வீசா இலவச ஒர்க் பர்மிட் கொடுப்பதாக வந்த வாட்சப் தகவலை வைத்து மேற்படி நிறுவனத்திற்கு ஒரு 1,38,000 ரூபாய் பணத்தை பல்வேறு தவணைகளில் கடந்த 13.07.23 செலுத்திய பிறகு,  நிறுவனத்திடம் இருந்து எந்த தகவலும் அவருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து காவல் துறையினருக்கு கொடுத்த புகாரின் மேல் புதுச்சேரி இணைய வழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தேவா என்பவர் இணைய வழியில் அதிக லாபம் தரும் முதலீடுகள் என்று வந்த வாட்சப் தகவலை நம்பி இன்ஸ்டாகிராம் லிங்க் மூலமாக இணைய வழியில் பதிவு செய்துள்ளார். இந்த மோசடிக்காரர்கள் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளுக்கு 48, 000 ரூபாய் பணத்தை அனுப்பிய பிறகு தன்னுடைய வங்கிக் கணக்கில் இருக்கின்றது போல் பணம் காட்டப்பட்டுள்ளது. அப்போது பணம் எடுக்க முயன்றவர் பணத்தை எடுக்க முடியாததால் நேற்று இணைய வழி காவல் நிலையம் வந்து புகார் கொடுத்தார். இந்த சம்பந்தமாகவும் இணைய வழியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.