இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ரீல்ஸ் (Reels) காண்பது அன்றாட செயல்களில் ஒன்றாகிவிட்டது. வேலைப்பளு, அவசர வாழ்க்கை ஆகியவற்றில் இருந்து ப்ரேக் எடுக்க ரீல்ஸ் காண்பது, அதிக நேரம் ஸ்க்ரால் செய்வது ஆகிய பழக்கம் பலருக்கும் இருக்கலாம். ஆனால், அதிக நேரம் ரீஸ்ல் பார்ப்பது, ஒரு நாள் கூட ரீல்ஸ் காணாமல் இருக்க முடியாது என்பவர்களுக்கு சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க. 


 BMC ஆய்வு இதழில் வெளியிடப்பட்டதகவலின்படி, அதிக நேரம் ரில்ஸ் பார்க்கும் இளைஞர்கள், நடுத்தர வயதினர் ஆகியோருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சீனாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில்  4,318 பேர் பங்கேற்றனர். இதில் அதிக நேரம் ரீல்ஸ் காண்பாவர்களின் உடல்நிலை பற்றி கண்காணிக்கப்பட்டது. அவர்களுக்கு  உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக கண்டறியப்பட்டது. பெங்களூரில் வசிக்கும் இதய மருத்துவர் இந்த தகவலை அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். இது பற்றி சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. 


மருத்துவர் தீபக் கிருஷ்ணமூர்த்தி அவருடைய எக்ஸ்தள பதிவில்,” ரீல்ஸ் பார்ப்பது கவனச்சிதறலை உருவாக்கும். இந்த ஆய்வு சொல்வதை கவனிங்க.” என்று குறிப்பிட்டு ஆய்வுக் கட்டுரையின் ஸ்க்ரீன்ஷாட் இணைத்துள்ளார். 






மேலும், உறங்கும் நேரத்தில் ரீல்களைப் பார்ப்பதால் என்னாகும் என்பது பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. "திரை நேரம் என்பது தொலைக்காட்சியைப் பார்ப்பது, வீடியோ கேம்கள் விளையாடுவது மற்றும் கணினிகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. ஆனால், இப்போது தூங்க செல்வதற்கு முன்பு, ரீல்ஸ் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இது தூக்கத்தின் தரத்தையும் குறைக்கிறது.” என்று ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கிறது. 


 தூங்குவதற்கு முன் ரீல்ஸ் டியோக்களைப் பார்ப்பது ’sympathetic nervous சிஸ்டத்தை தூண்டிவிடும். இதனால் உடலின் "fight-or-flight’ நிலைக்கு சென்றுவிடும். இதன் காரணமாகவும் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தூங்குவதற்கு முன்பு மட்டுமல்ல, தினமும் ரீல்ஸ் பார்க்கும் நேரத்தை குறைப்பது நல்லது என்று அறிவுறுத்துகின்றனர். அரை மணி நேரத்திற்கு மேல் ரீல்ஸ் பார்ப்பது, தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு ஸ்மாட்ஃபோன் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை தவிர்க்கலாம். 


தூக்கமின்மை மனநிலையை பாதிக்கும் வாய்ப்பு அதிகம்.  எரிச்சல் உணர்வு, மனநிலை மாற்றங்கள், மன அழுத்தம் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. சோகம் அல்லது பதற்ற உணர்வு ஏற்படும். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும்படி ஆகிவிடும். அதிக நேரம் சமூக வலைதளங்களில் செலவிடுவதை தவிர்க்கவும். 'Scroll' செய்துட்டே இருக்கீங்களா? அதை குறைக்க முயற்சி பண்ணுங்க.



10-3-2-1-0 பார்முலா:


ஃபிட்னஸ் கோச் Martolia, நிம்மத்தியான தூக்கத்திற்கு சொல்லும் டிப்ஸ்கள் இவை:


தூங்க செல்வதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பு காஃபின் உணவுகளுக்கு நோ சொல்வது, தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிடுவது, தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அலுவல் சார்ந்த பணிகளை 2 மணி நேரத்திற்கு முன்னதாவே முடித்து கொள்வது, படுக்கைச் செல்வதற்கு 1 மணி நேரம் முன்னதாகவே எல்க்ட்ரானிஸ் கேட்ஜட்களைத் தவிர்ப்பது, உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் நிம்மத்தியாக தூங்கலாம். இதை பழக்கமாகவும் மாற்றிகொள்ளலாம்.


பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.