TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு

Tamilnadu Rain Updates: தமிழ்நாட்டில் இன்று இரவு சென்னை , கன்னியாகுமரி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் இன்று கன்னியாகுமரி, நெல்லை,தென்காசி, விருதுநகர்,மதுரை,சிவகங்கை , திண்டுக்கல்,திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,திருவாரூர், தஞ்சாவூர், திருவள்ளூர்,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர்,சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 27 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று இரவு 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

 

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வானிலை நிலவரம்:

14-01-2025: பொங்கல் நாள்- வானிலை

தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் பார்க்க: Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...

15-01-2025:

தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

16-01-2025  முதல் 17:01.2025:

தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

18-01-2025:

 கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

19-01-2025:

கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்

இன்று-2015) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 20  டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-34  டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நாளை (14:01.20252 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement