வீட்டிலேயே பாசிப்பயறு கீரை வளர்க்கலாம்


பாசிப்பயிற்றை முன் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். பின் ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து அதன் மேல் பகுதியை வெட்டி எடுத்துவிட வேண்டும். அடிப்பகுதியில் மண்ணை நிரப்பவும். மண் நன்றாக நனையும் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். ஊற வைத்த பாசிப்பருப்பை காலையில் எடுத்து இந்த தண்ணீர் பாட்டிலில் உள்ள மண்ணிற்கு மேல் போட்டு வைக்கவும். இந்த பாட்டிலை வீட்டின் ஜன்னல் ஓரத்தில் வைத்து விடலாம். இரண்டு நாட்களில் இது முளைத்து விடும். பின் இதில் தினந்தோறும் போதுமான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு வாரத்தில் இந்த கீரை நன்றாக வளர்ந்து விடும். இந்த கீரையை பறித்து தோசை மாவில் கலந்து தோசை சுடலாம். அல்லது வேறு ஏதேனும் கீரையுடன் சேர்த்து சமைக்கலாம். சாலட்டுகளில் பயன்படுத்தலாம்.


இந்த கீரை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உங்கள் வீட்டில் இடம் இருந்தால்  லேசாக மண் தோண்டிவிட்டு மண்ணின் மீது தண்ணீர் ஊற்றி விட்டு ஈரமானதும் பாசிப்பருப்பை, அதன் மீது தூவி விட்டு. பாசிப்பயிற்றின் மீது லேசாக மண் தூவி விட்டு அதன் மீது தண்ணீர் தெளித்து விட்டாலும். ஓரிரு நாளில் கீரை வளர்ந்து விடும்.


கீரை லேசாக வளர்ந்ததும் தினம்தோறும் தவறாமல் தண்ணீர் ஊற்றவேண்டும். ஒரு வாரத்தில் கீரை வளர்ந்து விடும். 


பூண்டை எளிமையாக உரிக்க டிப்ஸ்


பூண்டு உரிப்பது பலருக்கும் சிரமமாக இருக்கும். இதை எளிதில் உரிக்க வேண்டுமென்றால் கால் கிலோ பூண்டை பற்களாக உடைத்துக்கொள்ள வேண்டும். இதில் 6 சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டு, அனைத்து பூண்டு பற்கள் மீதும் படும்படி கலந்துவிட வேண்டும்.


பின் இந்த பூண்டை வெயிலில் காய வைத்து எடுத்து உரித்தால் இதன் தோல் எளிதில் உரிந்து வந்து விடும். 


மேலும் படிக்க


Sheer Khurma: ரம்ஜான் ஸ்பெஷல் பாயாசம்... நாவில் எச்சில் ஊறும் சுவையில் ஷீர் குருமா...செய்முறை இதோ!


Vegetable Stew: கேரளா ஸ்டைலில் வெஜிடபிள் ஸ்டூவ்.. இடியாப்பத்திற்கு சூப்பர் காம்போ - செய்முறை இதோ!