நாம் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது அல்லது அதிக வேலை செய்யும்போது, ​​செல்ஃப் கேர் எடுக்க நாம் தவறிவிடுகிறோம். இது நீண்ட காலத்துக்கு நம்மை பாதிக்கும். காலையில் ஒரு நல்ல கப் காபியை ருசிப்பது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்ந்து பேசுவது, உடற்பயிற்சி செய்வது, சரியான நேரத்தில் சாப்பிடுவது மற்றும் நீர்ச்சத்துடன் இருப்பது ஆகியவை நமக்கு உடல் அளவிலும் மனதளவிலும் நன்றாக உணர வைக்கும். இது தொடர்பாக உளவியலாளர் டாக்டர் ஜென் ஆண்டர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ள சில குறிப்புகள் இங்கே.






சூரியனுக்கு முன்பு இளைப்பாறுவது: உங்கள் முகத்தை சூரிய வெளிச்சத்துக்கு வெளிப்படுத்துவது மற்றும் இயற்கை சூழலில் நடப்பது ஆகியவை கூட்டாக நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை செய்கிறது. 


காலை பழக்க வழக்கங்கள்: காலை பழக்க வழக்கத்தை கடைபிடிப்பதில் நமக்கு கூடுதல் எனர்ஜி கிடைக்கக் கூடும். அதில் காபி சாப்பிடுவது, ஜர்னலிங் செய்தல் அல்லது செய்ய வேண்டிய பட்டியலைத் திட்டமிடுவது ஆகியவை அடங்கும்.


நண்பர்களுடன் பேசுதல்: நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வழக்கமான பேச்சு உங்கள் மனது மற்றும் உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. நாம் வயதாகும்போது, ​​தனிக் குடும்பத்திற்கு வெளியே உள்ள நட்பும் உறவுகளும் காணாமல் போய்விடுவார்கள். இருப்பினும், நெருங்கிய நண்பர்கள் மற்றும்  குடும்பத்துடன் வலுவான உறவுகளைப் பேணுவது நல்வாழ்வையும் நம் வாழ்வின் நோக்கத்தையும் ஆதரிக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது.


உடலை ஸ்ட்ரெச் செய்வது: உங்கள் மனநிலையை அதிகரிக்கவும், மூளையின் உடல் இணைப்பைச் செயல்படுத்தவும் உடலை ஸ்ட்ரெச் செய்வது பயனுள்ளதாக இருக்கும். ஒட்டுமொத்த ஆரோக்கியம், வலிமை மற்றும் உடலின் நெகிழ்வுத்தன்மைக்கு தினசரி ஸ்ட்ரெச் மிகவும் உதவுகிறது.


ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்பது: ஊட்டச் சத்துள்ள உணவுகளை உண்பது உங்களுக்கு மனநிறைவைத் தருவதோடு மட்டுமல்லாமல், உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி, உங்கள் நாளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதையும் உறுதிசெய்யும்.


நீர்ச்சத்துடன் இருத்தல்: உங்கள் மூளை 73 சதவிகிதம் தண்ணீரைக் கொண்டுள்ளது. நிபுணர்கள் ஒரு நாளைக்கு ஆண்களுக்கு 15.5 கப் (3.7 லிட்டர்) தண்ணீரையும், பெண்களுக்கு ஒரு நாளைக்கு 11.5 கப் (2.7 லிட்டர்) தண்ணீரையும் குடிக்க பரிந்துரைக்கின்றனர்.