மீன், கோழி, ஆடு ஆகிய இறைச்சி வகைகளை கடைகளில் இருந்து வாங்கி ஃபிரிட்டில் ஸ்டோர் செய்யும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காவே..
ஃப்ரிட்ஜில் வைத்த இறைச்சியை சாப்பிடலாமா?எப்படி ஸ்டோர் செய்வது உள்ளிட்ட தகவல்களை காணலாம்.
சமைக்காத இறைச்சி வகைகளை ஸ்டோர் செய்வதற்காக தனியே ஒரு பகுதியுடன் ஃபிரிட்ஜ் வகைகள் உள்ளது. அதில் இறைச்சி வகைகளை ஸ்டோர் செய்து வைக்கலாம்.
இறைச்சி வகைகளை பிளாஸ்டி பையில் வைக்கிறீர்கள் என்றால் அதில் காற்றுபுகாத அளவு இருக்க வேண்டும். அதில் தண்ணீர் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். ஃப்ரிசரில் வைக்கும்போது தரமான கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களை பயன்படுத்தவும். ஃபாயில் ஷீட் பயன்படுத்தினால் இரண்டு லேயர்களாக பயன்படுத்துவது சிறந்தது. இது இறைச்சியை ஃபிரெஷ் ஆக வைக்க உதவும். பிளாஸ்டில் பையில் வைத்தால் அதிலுள்ள காற்று முழுவதையும் நீக்கிவிட்டு வைக்கலாம்.
ஃபிரிசரில் இறைச்சி வகைகளை வைக்கும்போது அதில் எப்போது வாங்கியது என்பதை கூட லேபிளில் எழுதி ஒட்டிவிடலாம். வெகுநாள் கழித்து அதை பயன்படுத்துவது தடுக்கப்படும். ப்ரிசரில் முறையாக வைக்கப்படும் இறைச்சி ஆறு மாதங்கள் கெடாமல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
கோழி, ஆடு, மீன் ஆகிவற்றை நறுக்கிய பிறகு ஃபிரிட்ஜில் வைக்கவும். சிறிய துண்டுகளாக நறுக்குவதால் இறைச்சி பிரெஷ்ஷாக இருக்கும். தேவையானபோது அளவாக இறைச்சியை எடுத்துக்கொள்ளலாம்.
சமைக்காத இறைச்சியை ஃபிரிட்டில் வைக்கும்போது அதன் தட்பவெப்பநிலை முக்கியம். -18 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு கீழ் வைக்க வேண்டும். குறிப்பிட்ட வெப்பநிலையில் வைக்கவில்லை என்றால் அது இறைச்சியில் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு காரணமாகிவிடும்.