உளுந்தூர்பேட்டை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டிற்கு நடப்பட்ட கொடி கம்பங்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விசிக மாநாடு கொடி கம்பங்கள் திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில் இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மகளிர் கலந்து கொள்ள உள்ள நிலையில் உளுந்தூர்பேட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினரின் அனுமதியுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பங்கள் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் நட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் நட்டு வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் மதிப்புள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கொடி கம்பங்களில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியை அவிழ்த்து போட்டுவிட்டு கொடி கம்பங்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விசிக கொடியை வீசி விட்டு கம்பம் திருட்டு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பங்களை மர்ம நபர்கள் திருடிக் கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியினை சாலையோரமாக வீசி சென்ற சம்பவத்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மகளிர் அணி தலைவிகள் கலந்து கொள்ள உள்ள நிலையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போதிலும் இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் அரங்கேறியுள்ளது பொதுமக்களிடையும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.