ஒரே நாளில் பளபளப்பான சருமத்தை பெற முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் மேம்படுத்த நீண்ட காலத்திற்கு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். உங்கள் உணவில் குறிப்பிட்ட மாற்றங்களை செய்வதும் ஆரோக்கியமான சருமத்தை பெற வழி வகுக்கும். இயற்கையாக விளையும் பழங்கள், இலை காய்கறிகள் மற்றும் புதிய பழச்சாறுகள் உள்ளிட்டவற்றுடன் உங்கள் சருமத்தை மேம்படுத்தும் மேலும் சில உணவுகளும் உள்ளன. அத்தகைய உணவு வகைகளில் ஒன்று விதைகள். இவை உங்கள் தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது. 


உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 வகையான விதைகள்:


1. பூசணி விதைகள்


பூசணி விதைகளில் ஸ்குவாலீன் மற்றும் வைட்டமின் ஈ உள்ளது, இது உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இதில் துத்தநாகம் நிறைந்துள்ளது. இது வெடிப்புகளைத் தடுக்கவும் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவும் என சொல்லப்படுகிறது. பூசணி விதைகளில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உங்கள் சருமத்தை மிருதுவாகவும் பொலிவாகவும் மாற்ற உதவுமாம். இந்த விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை உங்கள் சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என சொல்லப்படுகின்றது. 


2.சியா விதைகள் 


சியா விதைகள் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கின்ற. இது தோல் அழற்சி மற்றும் எரிச்சலை எதிர்த்துப் போராட உதவுகிறது. சியா விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுவதாகவும், சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளைத் தடுக்க உதவுவதாகவும் சொல்லப்படுகிறது. சியா விதைகள், செரிமானம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல ஆரோக்கிய நலன்களைக் கொண்டிருப்பாதாக சொல்லப்படுகிறது. 


3. சூரியகாந்தி விதைகள்


சூரியகாந்தி விதைகள் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றால் நிரம்பியிருப்பதால் உங்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கும். லினோலெனிக், ஒலிக் மற்றும் பால்மிடிக் அமிலங்கள் போன்ற கொழுப்பு அமிலங்கள் சூரியகாந்தி விதைகளில் காணப்படுகின்றன. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். எனவே சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தி, இளமையான தோற்றத்தைப் பெற விரும்பினால், உங்கள் உணவில் சூரியகாந்தி விதைகளைச் சேர்த்துக்கொள்ளலாம் என சொல்லப்படுகிறது. 


4.எள் விதைகள் 


எள் விதைகளில் கணிசமான அளவு துத்தநாகம் உள்ளது. அவை வயதான எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்த எள் விதைகள் உங்கள் தலைமுடிக்கும் சிறந்தது.


5. ஆளி விதைகள்


ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, சில கொழுப்பு அமிலங்கள் குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு அவசியம். ஆளி விதைகளிலும் இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இந்த விதைகளை உட்கொள்வது ஹார்மோன் சமநிலையை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. இது முகப்பருவையும் குறைக்க உதவும் . இந்த சத்தான விதைகளில் செலினியம், துத்தநாகம் மற்றும் உங்கள் சருமத்திற்கும் உங்கள் உடலுக்கும் பலன் அளிக்கக்கூடிய பல்வேறு கனிமங்கள் உள்ளன.