அலுவலகம் மற்றும் குடும்பம் இரண்டையும் பேலன்ஸ் அன்றாட வேலைகள் செய்தவற்குள் மனஅழுத்தம் மற்றும் பதட்டம் இரண்டும் வந்துவிடுகிறது. ஒரு பக்கம் வேலை பளு, தேவையான உணவு எடுத்து கொள்ள முடியாமல் இருப்பது, போதுமான ஓய்வு கிடைக்காமல், தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் சூழல், பொருளாதார சிக்கல் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு காரணத்தால் மனஅழுத்த பிரச்சனையால் பாதிக்க படுகின்றனர். ஒவ்வொருவர் வாழ்வியல் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் மனஅழுத்தம் மாறுபடும். இந்த மனஅழுத்தம் பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதில் இருந்து மீண்டு வருவதற்கு சில மூலிகைகள் மிகவும் உதவியாக இருக்கும்.
அஸ்வகந்தா - இது ஆயுர்வேத மருத்துவத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்த படும் ஒரு மூலிகை. இது மனஅழுத்தத்தை ஏற்படுத்தும், கார்டிசோல் ஹார்மோன் அளவை குறைக்கும். இதனால் இயற்கையாகவே மனஅழுத்தம் குறையும். தொடர்ந்து இந்த அஸ்வகந்தா எடுத்து கொள்வது, மனஅழுத்தம், பதட்டம், சோர்வு, தூக்கமின்மை ஆகிய பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
வல்லாரை - வல்லாரை நினைவு திறன் மேம்படுத்துதல், மூளை செயல்திறன் மேம்படுத்துதல், போன்றவற்றிருக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்த பட்டது. சமீபத்திய ஆய்வின் படி, இது மனஅழுத்தம் , பதட்டம் ஆகியவற்றை குறைகிறது என கூறுகின்றனர். வல்லாரை கீரை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
துளசி - பெரும்பாலான வீடுகளில் துளசி செடிகள் வளர்க்கப்படுகிறது. இது சளி, இருமல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வளிக்கும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. இது மனதை அமைதி படுத்தும் பண்பு உடையது. தினம் இதை எடுத்து கொள்வதால், மனஅழுத்தம், பதட்டம், சோர்வு நீங்கி புத்துணர்வுடன் இருக்க உதவும். காலை வெறும் வயிற்றில் 2-4 துளசி இலைகளை மென்று தின்பது நல்லது.
எலுமிச்சை தைலம் - இது பார்ப்பதற்கு புதினா போன்று தோற்றமளிக்கும். தாவரவியல் புதினா குடும்பத்தை சேர்ந்தது. இது கவலை , பட்டம் ஆகியவற்றை வராமல் எதிர்த்து போராடும் பழக்கம் உடையது. இதன் இலைகள் புதினா போன்று இருக்கும்.இது அன்றாடம் பயன்படுத்துவது, மனஅழுத்தம், தலை வலி, சோர்வு, தூக்கமின்மை ஆகிய பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்கும்.
கரிசலாங்கண்ணி -இதன் இலைகளை அமைதிபடுத்தும் தன்மை கொண்டது. மூளைக்கு தேவையான இரத்த ஓட்டத்தை அதிகபடுத்துகிறது. உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைக்கும். மனஅழுத்தம் குறைக்கும்.
முன்னெச்சரிக்கை - எந்த மூலிகை உணவுடன் சேர்த்து கொள்ளும் போது ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெற்று எடுத்து கொள்வது நல்லது. மூலிகை அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டால் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.குறைவாக எடுத்து கொண்டால், எந்த பலனும் இருக்காது. சரியான அளவில் எடுத்து கொண்டால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கும். அதனால் மருத்துவ ஆலோசனையுடன் எடுத்து கொள்ளுங்கள்.