குளிர்காலத்தில் சூடாக உணவு சாப்பிட வேண்டும் என்பது பெரும்பாலானோரின் விருப்பமாக இருக்கும். சுட சுட டீ, உணவு சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். சமையல் செய்து முடித்த சில நேரத்திலே உணவு ஆறிவிடாமல் இருப்பதை பாதுகாக்க சில டிப்ஸ்..
சமைத்த உணவுகளை கூடுதல் நேரத்திற்கு சூடாக இருக்க உதவும் சில டிப்ஸ்
Insulated Containers:
உணவுகளை சமைத்தவுடன் ’Insulated Containers'-களில் மாற்றிவிட்டால் அது உணவை கூடுதலாக சிறிது நேரத்திற்கு கூடாக வைத்திருக்கும். தேவையானபோது அதை சூடு செய்தும் சாப்பிடலாம். சூடு செய்யும்போது கவனிக்க வேண்டியது. ஆவியில் வேகவைக்கும் முறையில் இதை செய்வது சிறந்தது. பிரியாணி, குழம்பு, சூப் வகைகளை இப்படி ஸ்டோர் செய்யலாம்.
அலுமினியம் ஃபாயில்
வெளியூர்களுக்கு செல்லும்போது சப்பாத்திகளை எடுத்து செல்லும்போது 'Aluminium Foil' ஷீட்களை பயன்படுத்து ஏன் என்று யோசித்தது உண்டா? ஏனெனில், அது உணவு சூடாக இருக்கவும் ஃப்ரெஷாக இருக்கவும் உதவும். கூடுதலாக கொஞ்ச நேரம் சூடாக வைத்திருக்க உதவும். சாண்ட்விச், பரோட்டா, தோசை உள்ளிட்டவற்றை அலுமினியம் ஃபாயில் ஷீட்களில் வைக்கலாம். பாத்திரத்திரன் மீது ஷீட்களை வைத்து மூடி வைத்தால் உணவு ஆறிவிடாமல் இருக்க உதவும்.
சூடான தண்ணீர்:
உணவு நீண்ட நேரத்திற்கு சூடாக இருக்க வேண்டும் என்றால் சூடான தண்ணீர் உள்ள பாத்திரத்தில் உணவை வைத்து மூடிவிடவும். இது உணவை சிறிது நேரத்திற்கு சூடாக வைத்திருக்கும்.
எலக்ட்ரிக் Warmers:
’Slow Cooker', எலக்ட்ரிக் Food Warmers கடைகளில் க்டைக்கும். இது உணவு சூடாக வைத்திருக்க உதவும். இதில் குறிப்பிட்ட டெம்ப்ரேச்சரில் வைத்துவிட்டால் உணவை சூடு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
Thermal Food Bags:
உணவை சூடாக வைத்திருக்க ’Thermal Food Bags’ மிகவும் சிறந்த ஆப்சன். அலுவலகம், வெளியூர், வெளியே செல்லும் திட்டம் இருப்பவர்களுக்கு உணவு சூடாக இருக்க வேண்டும் என்றால் இந்தப் பையை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்தும்போது அலுமினியம் ஃபாயில் ஷீட்களையும் பயன்படுத்தவும்.