சமூக வலைதளங்களில் எதிர்மறையான பதிவுகளை ஈடுபவர்களிடம் இருந்து விலகி இருக்குமாறு நடிகர் அல்லு அர்ஜூன் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்:
புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது அல்லு அர்ஜூனை பார்க்க முண்டியடித்த கூட்டத்தில் ரேவதி என்கிற பெண் ஒருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தார், மேலும் அவரது 9 வயது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் .
அல்லு அர்ஜூன் கைது :
கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜூனை , ஹைதராபாத் போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக அல்லு அர்ஜூனை கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி காவல்துறை கைது செய்தது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளில்லாமல் அல்லு அர்ஜூன் திரையரங்கத்திற்கு வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அல்லு அர்ஜூனை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது தெலங்கானா உயர்நீதிமன்றம்.
ரேவந்த் ரேட்டி குற்றச்சாட்டு:
இந்த சம்பவங்கள் குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டமன்றத்தில் கடுமையாக விமர்சித்து இருந்தார். இது குறித்து அவர் பேசியதாவது “பத்து திரையரங்குகள் இருக்கும் இடத்தில் நடிகர் வந்தால் கூட்டத்தை சமாளிக்க முடியாது என காவல்துறை தெரிவித்திருந்தது. இதையும் மீறி புஷ்பா 2 படத்தின் கதாநாயகன் வந்ததும் இல்லாமல் தனது காரின் ரூஃப் வழியாக ஷோ காட்டினார்”
அந்த கூட்டத்தில்தான் ரேவதியும் அவரது மகனும் மாட்டிக்கொண்டார்கள். அப்போது ரேவதி இறந்த நிலையிலும் தனது மகனின் கையை இறுக்கமாக பிடித்திருந்தார். அவரது கையில் அவரது மகனை மீட்க காவல் துறையினர் போராட வேண்டியதாக இருந்தது. ரேவதி இறந்துவிட்டார். அவரது மகன் தற்போது மருத்துவமனையின் நடைபிணமாக சாண்ட்விச் மாதிரி கிடக்கிறார்.
நாங்கள் யாரோ சிலரின் பேச்சைக் கேட்டு அவரை கைது செய்ததாக தகவல் பரப்புகிறார்கள். நீங்கள் சொந்தமாக தொழில் பண்ணுங்க , பணம் சம்பாதியுங்கள் , அரசிடம் மானியம் கேளுங்கள் மற்ற எல்லா சலுகையும் நீங்கள் கேட்கலாம் , ஆனால் இரண்டு உயிர்கள் பறிபோனபின் அரசிடம் சலுகை கேட்காதீர்கள் . நான் இந்த இருக்கையில் இருப்பது வரை உங்களுக்கு எந்த சலுகையும் கிடைக்காது" என அல்லு அர்ஜூனை ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அல்லு அர்ஜூன் வேண்டுகோள்:
இதன் காரணமாக அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் சிலர் தெலங்கானா அரசை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் அல்லு அர்ஜூன் தனது ரசிகர்கள் கண்ணியமான முறையில் நடந்துக்கொள்ள வேண்டும் என்று தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் எதிர்மறையான பதிவுகளை வெளியிடுபவர்களிடம் இருந்து விலகி இருக்குமாறு தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதற்கான கடிதம் வெளியிடப்பட்டுள்ளது தனிப்பட்ட முறையில் யாரையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவுகளை போட வேண்டாம் என்றும் பொறுப்புடன் தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
கடந்த சில நாட்களாக ரசிகர்கள் என்ற போர்வையில் போலி ஐடி மற்றும் சுயவிவரங்களை பதிவிட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் எதிர்மறையான பதிவுகளை வெளியிடுபவர்களிடம் இருந்து விலகி இருக்குமாறு ரசிகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் லனில் மட்டுமின்றி ஆன்லைனில் ஆஃப்லைனிலும் பொறுப்புடன் செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.