கோடைக்காலத்தில் பலருக்கும் குடிபான சாய்ஸில் ஒன்றாக இருப்பது லஸ்ஸி. இந்தியர்களின் பிரத்யேக பானம் சரி! கோடையில் லஸ்ஸியை குடிப்பதால் உடலுக்கு அத்தனை நன்மைகள் இருக்கிறதா என கேட்டீர்கள் என்றால் நிச்சயமாக இல்லை. அதனை குடிப்பதனால் ஏகப்பட்ட உடல் உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம் அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
சளி , இருமல் :
லஸ்ஸி குளிர்ச்சியான பானம் என்பது நான் அறிந்ததே ! கோடைக்காலத்தில் அதீத குளிர்ச்சியும் ஆபத்துதான். லஸ்ஸியை சிலர் இரவு நேரத்தில் பருக விரும்புவார்கள் . அது உடலுக்கு நல்லது எனவும் சில மித் உள்ளது. ஆனால் உண்மையில் லஸ்ஸியை இரவு நேரத்தில் பருகினால் சளி, இருமல் , காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் .
தோல் பிரச்சனை :
லஸ்ஸியில் அதிகபடியான லாக்டோஸ் உள்ளது. இது இயல்பாகவே உடலில் தோல் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடியது. அலர்ஜி உள்ளவர்கள் நிச்சயமாக லஸ்ஸியை தவிர்க்க வேண்டும் . அரிக்கும் தோலழற்சி மற்றும் பிற தோல் நிலைகள் உள்ளவர்கள் மோர் தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் இது உங்கள் நிலைமைகளை மோசமாக்கும் மற்றும் தோல் எரிச்சல் மற்றும் வறட்சியை ஏற்படுத்தும்.
உடல் எடை மற்றும் அஜீரண கோளாறு :
லஸ்ஸி அதிக கலோரி கொண்ட குளிர்பான, . இதில் புரதச்சத்துகள் அதிகம் . எனவே இது உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உகந்தது அல்ல . இரவு நேரத்தில் குறிப்பாக தூங்குவதற்கு முன்னதாக லஸ்ஸி பருகினல் ஜீரண கோளாறுகளை சந்திக்க நேரிடலாம்.
நீரிழிவு பிரச்சனையை அதிகரிக்கும் :
லஸ்ஸி அதிகப்படியான சக்கரையால் உருவாக்கப்படும் பானம் . இதனை சர்க்கரை நோயாளிகள் உட்கொள்வைதை தவிர்க்க வேண்டும் . மீறினால் லஸ்ஸியில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு உங்களது நீரிழிவு பிரச்சனையை தீவிரப்படுத்தும்
சிறுநீரக பிரச்சனை :
மசாலா லஸ்ஸி மற்றும் சாஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் உங்களுக்கு சிறுநீரக பிரச்சனையை ஏற்படுத்தலாம். உப்புகளில் அதிக சோடியம் இருப்பதால், அவற்றைக் குடிப்பதால் ஏற்கனவே இருக்கும் சிறுநீரகக் கோளாறுகள் மோசமடையலாம். ருசியாக இருக்கிறது என அபாயம் உணராமல் உண்ட்கொண்டால் சிறுநீரக பிரச்சனை மட்டுமல்ல உடலில் இரத்த அழுத்த அளவை உயர்த்தவும் செய்யும் . எனவே உஷார்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்