நீங்கள் உங்கள் காதலன்/காதலிக்கு மிகவும் ஆசையாக அலைந்து திரிந்து ஒரு பரிசு வாங்கிகொடுத்து அதற்கு நீங்கள் எதிர்பார்த்த ரியாக்‌ஷன் வராமல் போன அனுபவம் இருக்கிறதா? இதற்கு காரணம் அவர்களுக்கு உங்கள் மேல் அன்பில்லாமல் போனது இல்லை. உங்களிடம் அவர்கள் எதிர்பார்ப்பது அந்த பரிசாக இல்லாமல் இருக்கலாம் இல்லையா? இந்த பரிசிற்கு பதிலாக அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது கைகளை பிடித்து ஒரு சில நிமிட உரையாடலாக இருக்கலாம்.


இந்த காரணத்தினால் தான் நீங்கள் லவ் லாங்குவேஜ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு லவ் லாங்குவேஜ் இருக்கும் அதை தெரிந்துகொண்டால் தான் அவர்களிடம் அவர்களுக்கு புரிந்த மொழியில் உங்கள் காதலை வெளிப்படுத்த முடியும். மொத்தம் ஐந்து வகையான காதல் மொழிகள் இருக்கின்றன். இதில் உங்களுடையதும் உங்கள் காதலர்/காதலி ஆகியவர்களின் லவ் லாங்குவேஜ் என்னவென்பதை தெரிந்துகொள்ளுங்கள்


நம்பிக்கையளிக்கும் வார்த்தைகள்


இதை தங்கள் காதல் மொழியாக கொண்டவர்கள் எந்த ஒரு உறவிலும் முதன்மையாக எதிர்ப்பார்ப்பது நம்பிக்கையான வார்த்தைகளை. எத்தகைய பிரமாண்டமான பரிசுகளையோ அவர்களுக்கு அளிக்காத பாதுகாப்பு உணர்வை சில மணி நேரம் உரையாடுவது அவர்களுக்கு அளிக்கக் கூடியது.


சேவை உணர்வு


நமக்காக  நம் காதலர் சின்ன சின்ன சேவைகளை செய்வதை யார்தான் விரும்ப மாட்டார்கள். சேவை உணர்வு காதல் மொழியாக கொண்டவர்கள் தங்களது இணையிடம் எதிர்ப்பார்ப்பது இந்த சேவை உணர்வை தான். காலையில் உங்களுக்காக காபி போட்டு கொடுப்பதோ சமைப்பது, கால்களை பிடித்துவிடுவது, இது போன்ற சின்ன சின்ன செயல்கள்  செய்வது இவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியது. காற்றில் அலையும் காதலியின் கூந்தலை ஒழுங்குபடுத்துவது அவ்வளவு சிரமமான காரியமாக இருக்கப் போவதில்லைதானே..


பரிசுகளை பெறுவது


சிலருக்கு தொடர்ச்சியாக பாராட்டுக்களையும் பரிசுகளையும் பெறுவது உற்சாகமளிக்கக் கூடியது. ஒரு நாளில் அவர்களை பாராட்டும்படி ஒரு சின்ன அங்கீகாரம் அவரகள் எவ்வளவு கடினமான நாளையும் கடக்க உதவக்கூடியது.


சேர்ந்து நேரம் செலவிடுவது


சில நேரங்களில் உங்கள் காதலருடன் சேர்ந்து இருக்குபோது அவர் பேசுவதை  நீங்கள் கேட்காததற்காக உங்களிடம் சண்டை  போட்டதுண்டா? இதற்கு காரணம் அவர்கள் உங்களுக்கு முக்கியமில்லை என்று அவர்கள் உணர்வதால் தான். சிலர் அதிகபட்சமாக விரும்புவது தங்கள் பேசுவதை தங்கள் காதலர்கள் கேட்க வேண்டும் என்பதை மட்டும் தான். நீங்கள் அவர்களை கவணிக்கும் போது அவர்கள் உங்களுக்கு முக்கியமானவர்கள் என்கிற உணர்வையும் அளிக்கிறீர்கள் என்பதை நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தமுறை உங்கள் காதலர்  பேசும்போது உங்கள் செல்ஃபோனைத் தவிர்த்து அவர் பேசுவதை சற்று கவனித்துப் பாருங்களேன்.


தொடுவுணர்வு


தொட்டு பேசுவது சிலருக்கு முக்கியமானது. தொடுவது என்பது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை, ஒரு பாதுகாப்பான உணர்வை அளிக்கக் கூடியது.ஒன்றாக செல்லும்போது கைகளை கோர்த்துச் செல்வது என்பது இவர்களுக்கு முக்கியமானது.