ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்க உள்ள, பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


சென்னை - மும்பை மோதல்


ஐபிஎல் 16வது சீசன் 49வது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில்  உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில், டாஸ் வென்று மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பு தொடரில்  இரு அணிகளும் முன்னதாக மோதிய முதல் போட்டியில் மும்பை அணி நிர்ணயித்த158 ரன்கள் இலக்கை, 18.1 ஓவர்களில் துரத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் மும்பை அணி இன்று களமிறங்குகிறது. அதோடு, இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்க உள்ள, பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி: 


டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி, எம்எஸ் தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மகேஷ் தீக்ஷனா, தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே


இம்பேக்ட் பிளேயர்ஸ்:


அம்பத்தி ராயுடு, மிட்செல் சாண்ட்னர், சேனாபதி, ரஷீத், ஆகாஷ் சிங்


மும்பை இந்தியன்ஸ் அணி: 


ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர் ), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், ஸ்டப்ஸ், டிம் டேவிட், நெஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால்


இம்பேக்ட் பிளேயர்ஸ்:


கார்த்திகேயா , ரமன் தீப் சிங், பிரேவிஸ், கோயல், விஷ்னு வினோத்


சென்னை & மும்பை அணி நிலவரம்:


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான முந்தைய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள சென்னை அணி இந்த போட்டியில் மீண்டும் எழும் என்ற நம்பிக்கையில் உள்ளது.  அதேநேரம்,  தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மும்பை, கடைசி போட்டியில் பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்தனர். தொடர்ந்து, இன்றைய போட்டியில் வென்று ஹார்டிக் வெற்றியை பதிவு செய்ய மும்பை அணி தீவிரம் காட்டி வருகிறது.


நேருக்கு நேர்:


ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை 35 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில் அதிகபட்சமாக மும்பை அணி 20 முறையும், சென்னை அணி 15 முறையும் வெற்றி கண்டுள்ளது.  சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய கடைசி 5 போட்டிகளில் அதிகபட்சமாக சென்னை அணி 3 முறை வெற்றிபெற்றுள்ளது.   அதேநேரம், சென்னை சிதம்பரம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்த மைதானமாக இருந்தாலும், ஆதிக்கம்  செலுத்துவது என்னமோ, மும்பை இந்தியன்ஸ் அணிதான். இதுவரை இந்த மைதானத்தில்  இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளது. அதில் 5 முறை மும்பை அணியும், 2 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளது.