நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு.. புகையும் தூசு மண்டலமும் என்ற சிகரெட் விழிப்புணர்வு வாசகம் நம்ம ஊர் காற்று மாசுக்குமே கூட பொருந்தும். கொரோனாவுக்காக மாஸ்க் போட்டது போக தூசுக்காக இனி மாஸ்கோடுதான் வாழ வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது. காற்று மாசால் சுவாசப் பாதை கோளாறுகளும் மலிந்துவிட்டன. ஆஸ்துமா, நிமோனியா, ப்ரான்கிட்டிஸ் தொடங்கி பல்வேறு சுவாசப் பாதை கோளாறுகள் மக்களை ஆட்டிப்படைக்கின்றன. அட எவ்வளவு தான் மருந்து, மாத்திரை சாப்பிட என்று அங்கலாய்ப்பு ஏற்படத்தான் செய்கிறது. அதனால் சில மூலிகைகளையும் நம் வாழ்க்கையில் பழக்கப்படுத்திக் கொண்டால் இதுபோன்ற கோளாறுகளில் இருந்து நம்மை கொஞ்சம் தற்காத்துக் கொள்ளலாம்.


சுவாசப் பாதையைப் பேண நிறைய மூலிகைகள் உள்ளன. இருந்தாலும் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் ஐந்து மூலிகைகளை மட்டும் நாங்கள் பட்டியலிடுகிறோம்.


1) இஞ்சி: இஞ்சி நம் எல்லோரின் வீடுகளில் எப்போதும் இருக்கும் பொருள். இதில் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பன்புகள் உள்ளது. இது சுவாசப் பாதை கோளாறுகள், தொற்றுகளை, அலர்ஜிக்களை சரி செய்யும். இதில் எக்ஸ்பட்டோரன்ட் குணநலன்கள் உள்ளது. இது சளியை இலக்கி அதை வெளியேற்ற உதவும். இஞ்சியை தேநீர் இல்லை கசாயம் என நிறைய வடிவங்களில் எடுத்துக் கொள்ளலாம்.


2) பெப்பர்மின்ட்: பெப்பர்மின்ட் புத்துணர்ச்சி தரக் கூடியது. இதில் குளிர்ச்சி தரும் பண்புகள் உள்ளது. இது மூச்சுப்பாதையில் உள்ள அடைப்பை நீக்கும். ஆஸ்துமா, ப்ரான்கிட்டிஸ், சைனசிட்டிஸ் போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாக இருக்கும். பெப்பர்மின்ட்டை தேநீர் செய்து அருந்தலாம். இல்லாவிட்டால் அதை சுடு தண்னீரில் போட்டு ஆவி பிடிக்கலாம். பெப்பர்மின்ட் எண்ணெய்யும் சுவாசிக்க ஆவி பிடிக்க பயன்படுத்தலாம்.


3) மஞ்சள்: மஞ்சள் பல்வேறு ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பன்புகள் கொண்டது. இதில் உள்ள குர்குமின் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பன்பு கொண்டது மட்டுமல்லாது ஆன்ட்டி ஆக்சிடன்ட் பன்பும் கொண்டது. மஞ்சள் ஆஸ்துமா, ப்ரான்கிட்டிஸ், அலெர்ஜி போன்ற தொந்தரவுகளுக்கு குணம் தரும். இதனை தேநீராகவும் உணவில் சேர்த்தும் உண்பதால் நன்மை கிடைக்கும்.


4) துளசி: எல்லா வீடுகளிலும் இருக்கும் செடி துளசி செடி. இதை பேஸில் என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இதில் ஜிங்க், வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் இருக்கின்றன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் இது பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. இது ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி தன்மையும் கொண்டது. இதனால் சுவாசப் பாதை பலம் பெறும். தொற்றுகளுக்கு எதிராகவும் போராடும். ரத்தத்தில் உள்ள அசுத்தத்தை வெளியேற்றி பல்மோனரி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். 


5. திப்பிளி: திப்பிளி என்பது இந்திய சமையலறைகளில் சர்வ சாதாரணமாக இருக்கும் ஒரு பொருள் தான். இது சளி, இருமளுக்கு நல்ல தீர்வு தரும். வயது மூப்பினால் ஏற்படும் சுவாசப் பாதை கோளாறுகளை இது சரி செய்யும். திப்பிளியும் இருமல் மருந்தில் உள்ள குணங்களைக் கொண்டது. இது தொற்று நோய்களைத் தடுத்து நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும். திப்பிளி பவுடரை தேனுடன் சேர்த்து பயன்படுத்துவதால் சுவாசப் பாதை தொற்றுகள் நீங்கும்.