தன் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தாயின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே இதை நினைவில் கொண்டு குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைகளை பெற்று உணவு முறைகளைக் கடைபிடிப்பது குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.       


குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள்  பால் உற்பத்தியை பாதிக்கும் ஒரு சில உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், காஃபின் மற்றும் ஆல்கஹால் ஆகியவை பால் உற்பத்தியை பாதிக்கலாம். பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் உணவுகளை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். 


பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்துப் பார்க்கலாம்.



  1. ஏறக்குறைய அனைத்து வகையான மீன்களிலும் சிறிய அளவிலான பாதரசம் உள்ளது. இது மூளைக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு பொதுவான மாசுபடுத்தி எனப்படுகிறது. இருப்பினும், மீன் சாப்பிடுவதன் நன்மைகள்  அதனால் ஏற்படும்  தீமைகளை  விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. தாய்ப்பாலூட்டும் போது சுறா, வாள்மீன், டைல்ஃபிஷ், கிங் கானாங்கெளுத்தி உள்ளிட்ட சில வகை மீன்களை மட்டும் தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது. இந்த பெரிய  மீன்களில் பாதரசத்தின் அளவு  அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.  தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, மீன்களுக்கு பதிலாக  இறால் மற்றும் குறைந்த பாதரசம் உள்ள மீன்களை உண்ணலாம் என கூறப்படுகிறது. 

  2. மிளகுக்கீரை ஆன்டிகலக்டாகோக்ஸைக் கொண்டிருக்கின்றன, அதாவது  அவை தாய்ப்பாலின் உற்பத்தியைக் குறைப்பதாக கூறப்படுகின்றது.

  3. அடிக்கடி மற்றும் அதிகமாக மது அருந்துவது பால் உற்பத்தியைக் குறைத்து குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

  4. காபி, சோடா, டீ, சாக்லேட் ஆகியவற்றில் காஃபின் உள்ளது. இந்த பொருட்களை சாப்பிடும்போது இதில் உள்ள காஃபின் தாய்ப் பாலுக்குக் கடத்தப்படும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதிகப்படியான காஃபின் உட்கொள்வது குழந்தையின் அமைப்பில் காஃபின் சேர்வதற்கு வழிவகுக்கும், இதன் விளைவாக தூக்க முறைகள் சீர்குலைந்துவிடும். எனவே, எந்த வடிவத்திலும் தாய்மார்கள் தங்கள் உணவில் காஃபின் சேர்வதை தவிர்க்க வேண்டும்.

  5.  பதப்படுத்தப்பட்ட உணவுகளை மிதமாக உட்கொள்ள வேண்டும். கூடுதலாக, தாய்ப்பாலூட்டும் போது தாய் உண்ணும் உணவுகள்தான், எதிர்காலத்தில் அவரது குழந்தையின் உணவுப் பழக்கத்தை வடிவமைக்கும் என்று கூறப்படுகிறது. சமநிலையான உணவு முறையை  கடைப்பிடிப்பது மற்றும் குழந்தைக்கு போதுமான தாய்ப்பாலை உற்பத்தி செய்வதை உறுதி செய்வது அவசியம்.                                                                                                                                                                                                                                                                                                                 பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.