கொரோனாவிற்கு பிறகான இந்த காலக்கட்டத்தில் பலரும் லேப்டாப் மற்றும் மொபைலை சார்ந்தே தங்களது வேலைகளை முன்னெடுக்கின்றனர். குறிப்பாக லேப்டாப்பில் பணிபுரிபவர்களுக்கு அதன் முக்கியத்துவம் என்னவென்று நன்றாகவே தெரியும் . நான் தினமும் பயன்படுத்தும் ஒரு சாதனம் என்பதால் அதில் உங்கள் வீட்டு செல்ல பிராணிகளாலோ அல்லது குழந்தைகளாலோ அல்லது சுற்றுப்புறத்தாலோ அதிக கறைகள் அல்லது கீறல்கள் ஏற்பட்டிருக்கலாம். அது சில நேரங்களில் வேலைகளில் இருந்தும் கூட உங்களது கவனத்தை திசை திருப்பக்கூடும். ஆனால் சில எளிய முறைகளை பயன்படுத்தி , உங்களது லேப்டாப் ஸ்கீரீனின் அழுக்குகளை அகற்ற முடியும்.





ஆல்கஹால் கொண்டு சுத்தம் செய்தல் :


ஆல்கஹால் லேப்டாப் ஸ்கிரீனில் உள்ள கீறல்களை சுத்தம் செய்வதற்கு  ஒரு நல்ல வழி. லேப்டாப் மட்டுமல்ல டிவி மற்றும் மொபைல்  போன்றவற்றை சுத்தம் செய்யவும் இதைப் பயன்படுத்தலாம். முதலில் திரையை துடைத்துவிட்டு. மைக்ரோஃபைபர் துணியை ரப்பிங் ஆல்கஹாலில் நனைத்து திரையில் தேய்க்கவும். இது திரையில் உள்ள அனைத்து கறைகளையும் நீக்கி, உங்கள் திரை முற்றிலும் புதியது போல் ஜொலிக்கத் தொடங்கும்.


பெட்ரோலியம் ஜெல்லி:


 லேப்டாப் திரையில் உள்ள கீறல்கள் மற்றும் கறைகளை நீக்க பெட்ரோலியம் ஜெல்லியின்  ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.லேப்டாப் திரையில் பெட்ரோலியம் ஜெல்லியை தடவி மைக்ரோஃபைபர் துணியால் தேய்த்து சிறிது நேரம் விடவும். இப்போது சிறிது நேரம் கழித்து, உலர்ந்த துணியால் துடைக்கும்போது உங்கள் திரை பளீச் என்றாகிவிடும்.




 விண்ட்ஸ்கிரீன் பாலிஷ்:


 ஆழமான கீறல்கள் மற்றும் கறைகள் உங்களது லேப்டாப்பில் இருந்தால் ,  ஆட்டோமொபைல் விண்ட்ஸ்கிரீன் பாலிஷை பயன்படுத்தலாம். நானோ-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த பிரீமியம் பாலிஷ் உங்கள் லேப்டாப் திரையில் மேஜிக் செய்யும்.


ஸ்க்ராட்ச் ரிமூவர் :


லேப்டாப் கறைகளை நீக்க ஸ்க்ராட்ச் ரிமூவரை பயன்படுத்தலாம் . சந்தையில் பல பிராண்டுகளில் குறைந்த விலையில் ஸ்க்ராட்ச் ரிமூவர் கிடைக்கிறது. சிலர்  இதற்கு  மாற்றாக பற்பசையைப் பயன்படுத்துவதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர். இதனை பயன்படுத்தினால் திரையில் உள்ள கறைகளை எளிமையாக நீக்கலாம் என்கின்றனர்.


அழிரப்பர் அல்லது அழிப்பான் :


லேப்டாப் திரையில் உள்ள கீறல்களை சுத்தம் செய்ய அழிப்பான் பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும். அழிப்பான் உதவியுடன் லேப்டாப் திரையை லேசாக தேய்க்கவும். இப்போது 4-5 நிமிடங்கள் தேய்த்தால், லேப்டாப் திரையில் உள்ள கீறல் உடனடியாக மறைந்துவிடும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண