தைராய்டு சுரப்பிகள் தொண்டை பகுதியில் அமைந்து உள்ளது. இந்த சுரப்பியில் இருந்து ட்ரியோடோதைரோனைன், தைராக்ஸின், ஆகிய ஹார்மோன்கள் சுரக்கியது. இந்த ஹார்மோன்கள் வளர்சிதை மாற்றத்திற்கும், பெண்களுக்கு கருவுறுதலுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இது அளவுக்கு அதிகமாக சுரந்தாலோ, குறைவாக சுரந்தாலோ, உடலில் பல்வேறு பிரச்சனைகளை தரும். இந்த ஹார்மோன் குறைபாடு பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் வாழ்வியல் முறை தான். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உணவு பழக்க வழக்கம் ஆகிய காரணத்தால் இந்த ஹார்மோன் குறைபாடு வருகிறது.


ஹார்மோன் குறைபாட்டை சரி செய்ய உணவு பழக்க வழக்கம் மாற்றம், அவசியம். எந்த உணவை சேர்த்து கொள்வது, எதை தவிர்ப்பது என தெரிந்து கொள்வது அவசியம்.




ஆப்பிள் - தினம் ஒரு ஆப்பிள் எடுத்து கொள்ள வேண்டும். ஆப்பிள் எடுத்து கொள்வதால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும், இரத்தத்தில் சர்க்கரையில் அளவு அதிகமாகாமல் இருக்கும். தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்வதற்கு ஆப்பிள் உதவும். இதில் எண்ணற்ற ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்து இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. மேலும், இது உடலில் இருக்கும் கழிவுகள் நீங்கவும், ஹார்மோன் செயல்பாட்டை அதிகரிக்கவும் ஆப்பிள் முக்கிய பங்கு வகிக்கிறது.




பெர்ரி - பெர்ரி பழங்கள் ஹார்மோன் சுரப்பை அதிக படுத்துகிறது. தினம் பெர்ரி பழங்களை உணவில் சேர்த்து கொள்வது, ஹார்மோன் செயல்பாட்டை துரித படுத்துகிறது. ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி அல்லது இந்திய ஜூஜூப்  ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். ஹார்மோன் குறைபாட்டால் வரும் உடல் சோர்வு, உடல் பருமன், சர்க்கரை நோய் ஆகியற்றை இது சரிசெய்ய இது உதவும். பெர்ரி பழங்கள் கிடைக்கும் பருவத்தில் தவறாமல் எடுத்து கொள்ளுங்கள்..




ஆரஞ்சு - ஆரஞ்சு பழங்கள் வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்தது. இது தைராய்டு சுரப்பி துரிதமாக செயல்புரிய உதவும். இது உடலில் இருக்கும்  ஃப்ரீ ரேடிக்கல்கள் வெளியேற்ற உதவும். வீக்கத்தை குறைக்கிறது. தினம் ஒரு ஆரஞ்சு சாப்பிடுவது, உடலை புத்துணர்வுடன் வைக்க உதவுகிறது. இரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவை குறைகிறது. சர்க்கரையில் அளவை சீராக வைக்க உதவும். நீரிழிவு நோய் வராமல் ஆரஞ்சு தடுக்கிறது.




அன்னாசி பழம் - இதில் வைட்டமின் சி மற்றும் மாங்கனீஸ் சத்துகள் நிறைந்து இருக்கிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்கள் சேர்வதை தடுக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் பி சத்து தைராய்டு ஹார்மோன் பிரச்சனையால் வரும் உடல் சோர்வில் இருந்து மீண்டு வர உதவியாக இருக்கும்.




செயற்கை சர்க்கரை சேர்த்த இனிப்பு வகைகள், காலிஃளார், ப்ரோக்கோலி, கேக், சாக்லேட், பிஸ்க்ட் , ஐஸ் கிரீம் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.