தேயிலை இலைகள் சமையலில் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன, ஒரு பானத்தை தயாரிப்பது முதல் கொண்டைக்கடலையின் சுவையை அதிகரிப்பது வரை தேயிலை உபயோகப்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?. இதுதவிர, உங்கள் தலைமுடியில் தேயிலை இலைகளைப் பயன்படுத்துவதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பிட்ட வழிகளில் தேயிலை இலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பல தலைமுடி சார்ந்த பிரச்சனைகளை எளிதில் சமாளிக்கலாம். சமநிலையற்ற மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையின் விளைவாக பலர் முடி உதிர்தல், உலர்ந்த முடி மற்றும் வெள்ளை முடி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் கூறுகள் நிறைந்த தேயிலை இலைகளால் இது சாத்தியம். 


எனவே, முடி பராமரிப்பில் தேயிலை இலைகளின் பயன்பாடு மற்றும் அவை வழங்கும் சில நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.


இயற்கையான முறையில் தலைமுடிக்கு நிறம் ஊட்டப் பயன்படுத்தவும்: தேயிலை இலைகள் மிகவும் பயனுள்ள இயற்கை நிறமூட்டியாகும். வெள்ளை முடியை மறைப்பதற்கு அவற்றைப் பயன்படுத்த, 3 கப் தண்ணீரில் 3 கருப்பு தேநீர் பைகளை ஊறவைக்கவும், பின்னர் 3 தேக்கரண்டி உடனடி காபி தூளை கலக்கவும். சிறிது நேரம் கொதித்த பிறகு கலவையை குளிர்விக்கவும். அதை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி, உலர அனுமதிக்கவும். அதைத் தொடர்ந்து, உங்கள் தலைமுடியைக் கழுவி, நல்ல முடிவுகளைப் பாருங்கள்.




வறண்ட கூந்தலுக்கு குட்பை: உலர்ந்த, உயிரற்ற கூந்தலுக்கு சிகிச்சையளிக்க தேயிலை இலைகளையும் பயன்படுத்தலாம். ஒரு தண்ணீர் கிண்ணத்தில் தேயிலை இலைகளை கொதிக்கவைத்து, வடிகட்டி, ஆற வைக்கவும். இப்போது இந்த தண்ணீரில் கற்றாழை ஜெல்லை சேர்த்து உங்கள் தலைமுடிக்கு தடவவும். சில நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் தலைமுடியை சுத்தமான தண்ணீரில் கழுவவும். இது உங்கள் தலைமுடிக்கு பளபளப்பைக் கூட்டி மென்மையாக வைக்கும்.


பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட: தேயிலை இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை பொடுகைத் தடுக்க உதவுகிறது. இதற்கு தேயிலை இலைகள், எலுமிச்சை மற்றும் துளசி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீர் குளிர்ந்ததும், எலுமிச்சை சாறு சேர்த்து, இந்த கலவையை உங்கள் தலைமுடிக்கு தடவவும். அதன் பிறகு, உங்கள் தலைமுடியை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவவும். இது தலை அரிப்பு மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.