உடல் நலம் சீராக இருக்க வேண்டும் என்றால் குடல் நலம் முக்கியம். அதற்கு ஆரோக்கியமான உணவும், உடற்பயிற்சியும் அவசியும். சில வாழ்க்கை முறையும் குடல் நலத்திற்கு அவசியம்.


செய்ய வேண்டிய 5 விஷயங்கள்:


சோம்பு:


உணவில் சோம்பு சேர்த்துக் கொள்வது பல்வேறு அஜீரணப் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும். நீண்ட நாட்களாகப் பசியெடுக்காமல் அவதிப்படுபவர்களுக்குக் கூட, பசி உணர்வை சோம்புத் தூண்டுகின்றது. கடினமான உணவு வகைகளையும்  அலட்டல் இல்லாமல் செரிக்கவைக்கும் குணம் இதற்கு உண்டு அளவுக்கு அதிகமாக பசி எடுப்பவர்களுக்கு சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தில் சுத்தப்படுத்தும். மேலும் உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும்.


ஏலக்காய்:


இந்திய உணவு வகைகளுக்கு ஏலக்காய் மணம், சுவையை அளிப்பதோடு மட்டுமல்லாது, பல்வேறு மருத்துவ பயன்களை தன்னகத்தே கொண்டு உள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. வாயில் ஏற்படும் தொற்றுக்கள், தொண்டையில் ஏற்படும் பாதிப்புகள், மார்பு பகுதியில் ஏற்படும் சுணக்கங்கள், வாயு சம்பந்தமான கோளாறுகள், விஷக்கடி உள்ளிட்டவைகளுக்கு ஏலக்காய் சிறந்த தீர்வு அளிப்பதாக நம்பப்படுகிறது. ஏலக்காய், செரிமானத்திற்கு பேருதவி புரிவதால், இந்தியர்களின் ஒவ்வொரு சமையலிலும் அது நிச்சயம் இடம்பிடிக்கிறது. வயிற்றில் ஏற்படும் அல்சர், ,ஆசிட் ரீபிளக்‌ஸ் மற்றும் வாயு சம்பந்தமான கோளாறுகளுக்கு தீர்வு அளிக்கிறது. ஏலக்காயை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், வாய் சுகாதாரம் பேணப்படும். வாய் துர்நாற்றம் மற்றும் கெட்ட சுவாசத்தால் அவதிப்படுபவர்கள் ஏலக்காய் சாப்பிட்டு வர தீர்வு கிடைக்கும்.


பெருங்காயம்:


பெருங்காயம் என்பது ஒரு பூண்டுத்தாவரம், மானாசியஸ், அம்பெல்லிபெரேயே குடும்பத்தின் பல்லாண்டுச் செடி, அபியாசேயே என்றும் அழைக்கப்படுகின்றது. இச்செடி சுற்றுவட்டத்தில் 30-40 செ. மீ இலைகளுடன் 2 மீட்டர்கள் வரை உயர வளருகின்றது. தண்டு இலைகள் அகன்ற அடிப்பகுதியைக் கொண்ட காம்புகளைக் கொண்டுள்ளன. அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து. புலால் சமைக்கும்போதும், வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் துளியூண்டு பெருங்காயத்தை உணவில் சேர்க்க மறக்கவே கூடாது. 


ஓமம்:


ஓமம் தண்ணீர், குழந்தைகளுக்கு ஏற்படும் கோலிக் எனும் கடுமையான வயிற்று வலியை குறைக்க உதவுகிறது. ஓமத்தை வெல்லத்துடன் சேர்த்து இடித்து சாப்பிட செரிமான கோளாறுகள் நீங்கும். மேலும் உங்களுக்கு நன்றாக பசி எடுக்கும். சிறிது ஓமத்தை வாயில் போட்டு நன்றாக மென்று தின்றால் உங்கள் வாயுத் தொல்லை நீங்கும். இவ்வாறு மென்று தின்ற பின்னர் கொஞ்சம், வெந்நீர் குடித்தால் வயிறு பொருமல் நீங்கும்.ஒரு மெல்லிய துணியில் கொஞ்சம் ஓமத்தை முடித்து நுகர்ந்து வர, சளித்தொல்லை நீங்கும். ஓமத்திலுள்ள தைமால் என்ற வேதிப்பொருள் இருமலை ஏற்படுத்தும் தொற்றுக் கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் உடையது. இது இருமல் மற்றும் மூக்கடைப்பை குணப்படுத்தும். ஓமம் ஆரம்ப நிலை ஆஸ்துமாவை குணமாக்கும் திறன் உடையது. அதேநேரம் இடைநிலை ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்கவும் ஓமம் உதவுகிறது.


சீரகம்:


சீரகம் (Cumin Seed) விதை ஒரு பிரதான உணவாகும், இது கிட்டத்தட்ட எல்லா வீடுகளின் சமையலறைகளிலும் எளிதாகக் காணப்படுகிறது. சீரகம் உணவை சுவையாக மாற்றுவதற்கு மட்டுமல்ல, பல வகையான மூலிகைகளும் அதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. சீரகத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதால் அவை வயிற்றுப் பிரச்சினைக்கு மிகவும் பயனளிக்கின்றன. வயிற்றுப் பிரச்சினைகளைத் தவிர, சீரகத்தில் பல சிக்கல்களிலிருந்து (Cumin Seed benefits) நிவாரணம் தரும் பண்புகள் உள்ளன. சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது தவிர, ஃபைபர், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்றவற்றிலும் இது ஏராளமாகக் காணப்படுகிறது, இது வீக்கத்தைக் குறைக்கவும் தசைகளை தளர்த்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


எல்லோர் வீட்டிலும் எளிதாகக் கிடைக்கும் இந்த ஐந்து பொருட்களையும் அவ்வப்போது உணவில் சேர்த்துவந்தால் நம் குடல்நலம் பேணலாம்.


செய்யக் கூடாது ஐந்து தவறுகள்:


1. உணவுக்குப் பின் குளித்தல் கூடாது. அதுவும் 2 மணிநேரத்துக்கு அதை செய்யவே கூடாதாம். காரணம் உணவு செரிமானம் ஆக நம் உடலில் உள்ள ஃபையர் எனர்ஜி தேவை. உணவு உண்ட பின்னர் ஃபயர் எலமன்ட் வேலை செய்ய ஆரம்பிக்கும். ஆனால் அப்போது நாம் குளித்தால் வெப்பம் குறைந்து ஜீரணமாவது தடைபடும்.
2. உணவு அருந்தியவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டால், நீச்சல் பயிற்சி செய்தால் ஜீரணமாவது பாதிக்கப்படு வயிறு உப்புசம் பெறும். மேலும் உணவின் சத்துக்கள் உடலில் சேராமல் போய்விடும்.
3. மதியம் 2 மணிக்குப் பின்னர் உணவருந்தக் கூடாது. காரணம் அது சூரியன் உச்சத்தில் இருக்கும் நேரம். அப்போது உடலில் பித்தம் உச்சத்தில் இருக்கும். அதனால் ஆயுர்வேத மருத்துவத்தின்படி அது உணவு உண்பதற்கு சற்றும் உகந்த நேரம் இல்லை. மதிய உணவானது மிதமானது முதல் சற்று பிரம்மாண்டமானதாக இருக்கலாம்.
4. இரவில் தயிர் சாப்பிட்டால் அது கபம், பித்தத்தை அதிகரிக்கும். அதனால் குடல் நலம் பாதிக்கப்படும். மல இறுக்கம் ஏற்படலாம்.
5. உணவுக்குப் பின் தூங்கக் கூடாது. உணவுக்கும் உறக்கத்துக்கும் இடையே குறைந்தது மூன்று மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும். தூக்கத்தின் போது தான் உடல் புத்துணர்வை மீட்டெடுக்கும் எல்லா வேலைகளையும் செய்யும். அதனால் இரவில் லகுவான உணவு அதுவும் தூக்கத்துக்கு 3 மணி நேரத்துக்கு முன்னர் சாப்பிட வேண்டும்.