இந்தியாவைப் பொறுத்தவரை,வட இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களில் குளிரும், தென்னிந்தியாவில் வெப்பமண்டல பகுதிகளாகவும் இருக்கிறது. இதில் குளிப்பிரதேசத்தில் இருக்கும் மக்கள், குளிருக்கு ஏற்றார் போல,உடைகளை அணிகிறார்கள். தென்னிந்தியாவில் மழை மற்றும் குளிர்காலங்கள் மிகக் குறைவு. அதனால் இங்கு வசிக்கும் மக்களுக்கு வெயில் மற்றும் வெப்பம் என்பது பழகிப்போன ஒரு விஷயம். அதனால் குளிர் காலம் அல்லது மழைக் காலத்தில், குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ள, போர்வைகள் பயன்படுத்துவது அவசியமாகிறது.


பெரும்பான்மையான நாட்கள் இந்த போர்வைகள்,பீரோவிலோ அல்லது துணி அடுக்கும் அலமாரிகளிலோ இருக்கும்.ஏறக்குறைய ஆண்டில் ஆறிலிருந்து எட்டு மாதங்கள், இந்த போர்வைகள் மற்றும் கனமான தரை விரிப்புகள் ஆகியவை,நமது துணி வைக்கும் இடங்களில் இருக்கும்.இதே போல கடினமான தரை விரிப்புகள் மற்றும் தடிமனான திரைச்சீலைகள் என அனைத்தையுமே இந்த நேரத்தில்   பயன்படுத்துவோம்.


இப்படி பயன்படுத்தும் பெட்ஷீட் மற்றும் தடிமனான தரை விரிப்புகள் அழுக்காகவோ, தூசு படிந்து இருக்கும். இவற்றை துவைத்து காயவைத்து மடித்து வைப்பது என்பது, இல்லத்தரசிகளுக்கு மிக கடினமான வேலையாக இருக்கும். இதற்கு மிக எளிதான வழிகள் இருக்கிறது. முதலில் இந்த பெட்ஷீட், தடிமனான தரை விரிப்புகள் மற்றும் திரைச்சீலைகள் ஆகியவற்றை,மூன்று அல்லது நான்கு நாட்கள் வெயிலில் நன்றாக உலர வையுங்கள்.பின்னர் அவற்றை நன்றாக குச்சியை கொண்டு தட்டி, அதில் இருக்கும் தூசுக்களை வெளியேற்றுங்கள்.


பின்னர் நன்கு அடர்த்தியான சோப் ஆயில் அல்லது சோப் தூள் கொண்டு இந்த போர்வைகளை  ஊற வைக்கவும். பெட்ஷீட்கள் அல்லது தரை விரிப்புகள் அல்லது திரைச்சீலைகள் மிகவும் தடிமனாகவும், கனமாகவும் இருக்கும், என்பதனால், ஒரு நேரத்தில் ஒன்று அல்லது இரண்டை மட்டும் சலவை செய்ய எடுத்துக் கொள்ளவும்.


உங்கள் பெட்ஷீட்  அல்லது தரை விரிப்புகள் அல்லது திரைச்சீலைகள் மைக்ரோஃபைபரால் ஆனதாக இருந்தால் அவற்றை வாஷிங் மிஷினில் போட்டு சுத்தம் செய்யலாம்.


இப்படி வாஷிங்மெஷினில் போட்டு சுத்தம் செய்வதற்கு முன்பாக ஒரு மணிநேரம் அல்லது ஒன்றரை நேரம் நன்றாக ஊற வைத்து பின்னர் வாஷிங்மெஷினில் போட்டு எடுக்கவும்.


உங்களுடையது ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் ஆக இருந்தால் அதுவே ஈரம் உலர்த்தி உங்களுக்கு தந்துவிடும் இல்லையெனில் அவற்றில் ஈரம் போகும் வரை காத்திருந்து பின்னர் பெட் சீட்டை ட்ரையரில் போட்டு தண்ணீர் நீங்கிய பின் வெயிலில் காய வையுங்கள்.


ஒருவேளை நீங்கள் வாஷிங்மெஷினில் துவைக்காமல், உங்கள் கைகளினால் துவைக்க போகிறீர்கள் என்றால்,மொட்டை மாடி போன்று பெரிய இடமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.ஒரு மணி நேரங்கள் ஊறவைத்த பெட்சீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி கைகளால் துவைக்கும் போது, பெட்ஷீட் கணம் மற்றும் நீளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஒன்று அல்லது இரண்டு மட்டும் துவைப்பதற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு ஊறவைத்த ஒரு பெஷீட் எடுத்து,உங்களால் இயலும் என்றால்,பகுதி பகுதியாக கைகளால் பிரஷ் செய்யுங்கள். ஒருவேளை அந்த பெட்ஷீட் பிரஷ் போடுவதற்கு தோதாக இல்லை என்றால்,உங்கள் கால்களை பயன்படுத்தியும் நீங்கள் நன்றாக அவற்றை மிதித்து கசக்கி துவைக்கலாம்.


பின்னர் இவற்றை நன்றாக பிழிந்து, கனமான கொடிகளில் காய வையுங்கள்,கூடுமானவரை இந்த மழைக்காலத்தில் இந்த வேலைகளை செய்வதற்கு முன்னர்,மழை வருமா என்பதை வானிலை அறிக்கையை தெரிந்து கொண்டு செய்யுங்கள்.இதே போலவே எட்டு அல்லது ஒன்பது மணி காலையில் இந்த வேலையை முடித்து விடுங்கள்.அப்போதுதான் மாலை 5 மணி வரையிலும் நன்றாக  காய்ந்திருக்கும்.