ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு வரும், எலும்பு சம்மந்தப்பட்ட நோய்கள்  இப்போது இளம் வயதில் வருகிறது. இதற்கு ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு  காரணமாக இருக்கிறது.  வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. இவை இரண்டும் எலும்புகள் வலுப்படுத்தவும், எந்த நோயும் வராமல் பாதுகாக்கிறது. கால்சியம் சத்து நிறைந்த  உணவுகளை எடுத்து கொள்வதால், பெரும்பாலான எலும்பு நோய்கள்  வராமல் தடுக்கலாம்.



  1. பால் - கால்சியம் சத்து என்றதும் முதலில் நினைவுக்கு வருவது பால்  தான். ஒரு கப் பாலில் 280மிகி அளவு கால்சியம் சத்து உள்ளது. அன்றாட உணவில் பாலை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். குழந்தைகள் முதல் அனைவர்க்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கு பால் முக்கிய பங்கு  வகிக்கிறது.





  1. ஆரஞ்சு - ஒரு ஆரஞ்சில் 60மிகி அளவு கால்சியம் சத்து உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. மற்றும்  எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்து இதில் இருக்கிறது. கட்டாயம் ஆரஞ்சு சீசனில் இந்த பழத்தை தவறாமல் எடுத்து கொள்ளுங்கள்.





  1. மத்தி மீன் - ஒரு கப் அளவு இருக்கும் மீனில் 569மிகி அளவு கால்சியம் சத்து நிறைந்து இருக்கிறது. அசைவ உணவு பிரியர்களுக்கு கால்சியம் சத்து எடுத்து கொள்ள சிறந்த தீர்வாக மத்தி மீன் இருக்கிறது.





  1. சோயா பால் - ஒரு கப் பாலில், 60மிகி அளவு கால்சியம் சத்து உள்ளது. சிலருக்கு மாட்டு பால் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு இந்த சோயா பால் கால்சியம் சத்து நிறைந்த மாற்று உணவாகும். வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து இரண்டும் நிறைந்து இருக்கிறது.





  1. பாதாம் பருப்பு - ஒரு கப் வறுத்த பாதாமில் 457மிகி அளவு கால்சியம் சத்து உள்ளது. இதில் புரத சத்தும் நிறைந்து இருக்கிறது. இது ஊட்டச்சத்து மிக்க உளர் பழமாகும். இது இதய நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் புரத சத்து அமினோ அமிலங்கள் நிறைந்து இருப்பதால்,நினைவு திறனை மேம்படுத்தும். எலும்பு வலுவாக இருப்பதற்கு உதவியாக இருக்கும். 





  1. அத்தி பழம் - ஒரு கப் காய்ந்த அத்தி பழத்தில், 242 மிகி அளவு, கால்சியம் சத்து உள்ளது. இதில் பொட்டாசியம் மற்றும் நார்சத்து நினைந்த உணவாகும். இது எலும்புகளை வலுப்படுத்தவும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.





  1. தயிர் - இதில் 400மிகி அளவு கால்சியம் சத்து நிறைந்து இருக்கிறது. இப்போது கடைகளில் இது பல பிளேவர்களில் கிடைக்கிறது. தினம் உணவில் தயிர் சேர்த்து கொள்வதும், உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை தருகிறது.





  1. சீஸ் - ஒரு கப் சீஸில் 951மிகி அளவு கால்சியம் சத்து நிறைந்து இருக்கிறது. இது ஸ்னாக்ஸ் ஆக எடுத்து கொள்ளலாம். மற்ற உணவுகளிலும் சேர்த்து சாப்பிடலாம்.





  1. கீரைகள் - ஒரு கட்டு கீரையில் 336மிகி அளவு கால்சியம் சத்து உள்ளது. இது நார்சத்து நிறைந்து இருக்கிறது. இதில் மற்ற தனிம சத்துகளும் சேர்ந்து இருக்கிறது.





  1. ராகி - 100கிராம் ராகியை 344 மிகி அளவு கால்சியம் சத்து உள்ளது. அடிக்கடி ராகியை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.