மயிலாடுதுறையில் சுடுகாட்டில் விநோத வழிபாடு நடைபெற்றது. சத்குரு சித்தர் சுவாமிகளின் 58 ஆவது ஆண்டு சித்தி தினத்தை முன்னிட்டு, சுவாமி ஓங்காரநந்தா என்பவர், தனது சீடர்களுடன் சுடுகாட்டில் சிறப்பு பூஜை மேற்கொண்டார். சுடுகாட்டில் உள்ள இறந்தவர்களின் ஒவ்வொரு சமாதிக்கும், பூக்கள், பழங்கள், வெற்றிலைப்பாக்கு, இனிப்பு பண்டங்கள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
அதனையடுத்து, 50 கிலோ அரிசி கொண்டு சாதம் படைக்கப்பட்டு, ஒரே இடத்தில் குவியலாக வைத்து, அதில், சாம்பார், மோர், ரசம், அப்பளம், வடை, பாயசம், பழங்கள், இனிப்பு பொருட்கள் கொண்டு மஹாபடையல் நடைபெற்றது. தொடர்ந்து மஹா படையலுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சுடுகாட்டில் உள்ள ஒவ்வொரு சமாதிக்கும் தனித்தனியே தீபாராதனை காட்டப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று நீங்க வேண்டி சிவாய மந்திரத்தை 108 முறை கூறி கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.
நெல் மூட்டைகளுடன் லாரியை கடத்தி இரண்டாவது மனைவியின் வீட்டுக்கு எடுத்து சென்ற நபர் கைது...!
அதனையடுத்து படையல் செய்யப்பட்ட உணவுப் பண்டங்கள் பொதுமக்களுக்கு அங்கேயே விநியோகம் செய்யப்பட்டது. அவற்றை சுடுகாட்டிலேயே அமர்ந்து உண்டனர். இது குறித்து சுவாமி ஓங்காரநந்தா கூறும்போது, சுடுகாடு என்பது புனிதமான இடமாகும். இங்கு கண்ணுக்குத்தெரியாத சூட்சும ரூபத்தில், லட்சக்கணக்கான ஆன்மாக்கள் வசிக்கின்றன. அவர்கள் அமைதி அடைய வேண்டும். அவர்கள் அமைதி அடைந்தால், இயற்கை சீற்றங்கள், விபத்துக்கள் ஏற்படாது என்று கூறினார். இந்நிகழ்வில் மயிலாடுதுறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சுடுகாடு என்றாலே பலருக்கும் அச்சம் தானாக தோன்றும் அதுவும் பெண்கள் பெரும்பாலானோர் சுடுகாடு கைகளுக்கு செல்வதோ, சுடுகாட்டில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதோ கிடையாது. இதுபோன்ற காலகட்டத்தில் சுடுகாட்டில் உணவு சமைத்து படையலிட்டு அங்கேயே அமர்ந்து சாப்பிட நிகழ்வு அதனை பார்த்தவர்களுக்கும், கேட்டவர்களுக்கு ஒருவித ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ம் தேதியை சகல ஆன்மாக்கள் நினைவு நாளாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கிறார்கள். இறந்து போன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அன்று கல்லறை தோட்டங்களில் மலர் அஞ்சலி செலுத்தி வழிபாடு வழக்கம் இருந்தது வரும் நிலையில், மயிலாடுதுறை இந்துக்களும் இது போன்ற வழிபாட்டை மேற்கொண்டுள்ளனர்.
ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - ஒருதலைபட்சமாக நடந்துகொண்ட அதிகாரிகள்...!