பொதுவாக உன்னுடைய வேலையை ஜாலியாக செய்தால் உனக்கு ஓய்வு என்ற ஒன்று உனக்கு தேவையே இருக்காது என்று பலர் கூற நாம் கேட்டிருப்போம். எனினும் தினமும் 9-5 மணி வேலையை செய்வதால் நம்மில் பலருக்கு இந்த வாக்கியம் தவறு என்றே புரிதல் இருக்கிறது. ஆனால் அவர்கள் கூறியதுபோல ஒரு சில வேலைகள் இந்த உலகில் உள்ளன. அவற்றை செய்யும் போது உங்களுக்கு வேலை செய்கின்ற மாதிரி எந்த ஒரு சுமையோ வேலை பளுவோ இருக்காது. அந்த வேலைகள் அனைத்தும் கிட்டதட்ட நீங்கள் ஒரு வெக்கேஷனில் இருப்பதுபோல தோன்றும். அப்படி என்னடா வேலை.. உடனே சொல்லுங்க நாங்க எங்க வேலையை விட்டுட்டு அங்கே போறோம் என்றுதானே நினைக்கிறீர்கள். இதோ உங்களுக்காக அந்த வேலைகளின் பட்டியல் மற்றும் அவற்றில் கிடைக்கும் சம்பளங்களின் பட்டியல்:..
தீவு பராமரிப்பாளர்:
இயற்கை எழில் சூழ அமைந்திருக்கும் தீவுகளை பராமரிப்பதற்கு என்றே சில வேலைகள் உள்ளன. அவை பெரும்பாலும் வெளிநாடுகளில் அதிகம் சம்பளம் அளிக்கப்படும் வேலைகளில் ஒன்று. ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிரேட் பாரியர் ரீஃப் தீவுகளில் இந்த வேலை உள்ளது. அங்கு உள்ள இயற்கை அழகை பராமரிப்பது, உள்ளூர் வாசிகளுடன் உரையாடுவது போன்ற மிகவும் எளிமையான வேலைகள் இதில் உள்ளன. இந்த வேலைக்கு இந்திய மதிப்பில் சராசரியா 2.19 கோடி ரூபாய் ஆண்டிற்கு சம்பளமாக கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது.
ப்ரொஃபஷ்னல் ஸ்லீப்பர்:
இந்த பெயரை பார்த்தால் இது எதோ பெரிய வேலை என்று நினைப்பீர்கள். ஆனால் ஒன்றும் இல்லை தூங்கிக்கொண்டே இருப்பதுதான் இந்த வேலை. நீங்கள் தூங்குவதற்கு ஒருவர் காசு தருவார். அவ்வளவு எளிதாக நினைத்தவுடன் நம்மால் தூங்கமுடியாது. அதற்கு தான் இந்த சம்பளம். மேலும் தூங்கும்போது மனித உடல் குறித்து ஆராய்ச்சி, படுக்கை மெத்தைகள் ஆய்வு உள்ளிட்டவை செய்வதற்காக உங்களைப் பயன்படுத்துக்கொள்வார்கள். அவர்களுக்கும் லாபம், நீங்களும் தூங்கலாம். இதற்கு ஆண்டு ஊதியம் 40 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.
வெகேஷன் Pro:
இந்த வேலையின் சிறப்பு அம்சம் என்னவென்றால் நீங்கள் ஒரு இடத்திற்கு பயணம் செய்து அங்கு உள்ள இடங்கள் மற்றும் அவற்றின் வசதிகள் ஆகியவற்றை தெரிந்துகொள்ள வேண்டும். பின்னர் அதை வைத்து சுற்றுலா நிறுவனங்களில் பணிபுரிந்து பயணிகளுக்கு உதவியாக இருக்க வேண்டும். அதிகம் பயணத்தை விரும்புவோருக்கு இது மிகவும் ஏற்ற வேலை. இந்த வேலைக்கு சராசரியாக இந்திய மதிப்பில் 14 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் வகையில் வேலைகள் உள்ளன. அவை பெரும்பாலும் வெளிநாட்டில் உள்ள சுற்றுலா நிறுவனங்களில் கிடைக்கும்.
பீர் சுவைப்பவர்:
வெளிநாட்டில் உள்ள பீர் கம்பெனிகள் தங்கள் நிறுவனம் தயாரிக்கும் பீர்களை ருசித்து பார்த்து அதன் சுவையை சொல்வதற்கு சிலரை வேலைக்கு எடுப்பார்கள். அந்த வேலையில் நீங்கள் செய்வது ஒன்றே ஒன்றுதான். பீரை குடித்துவிட்டு அது எப்படி இருக்கிறது என்று தெளிவாக கூறவேண்டும். இதில் உங்களுக்கு பீர்கள் தொடர்பான அறிவு அதிகம் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படும். இந்த வேலையில் ஆண்டிற்கு 35 லட்சம் ரூபாய் வரை வருமான கிடைக்கும்.
நெட்ஃபிளிக்ஸ் டேகர்:
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றை பார்த்து சரியான பிரிவுகளில் டேக் செய்ய வேண்டும். இது ஒரு பகுதி நேரவேலை. இந்த வேலைக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாரத்திற்கு 100 டாலர்கள் வரை கொடுக்கும். இது நெட்ஃபிளிக்ஸ் வாடிக்கையார்களின் தேடல் மற்றும் எளிதாக பார்ப்பதற்கு உதவும் என்பதால் இது மிகவும் முக்கியமான வேலைகளில் ஒன்று.
சாக்லேட்டைச் சுவைப்பவர்:
சாக்லேட் தயாரிக்கும் நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் சாக்லேட்களை சுவைத்து பார்த்து அதன் ருசியை கூறுவதற்கு சிலரை வேலைக்கு எடுப்பார்கள். இந்த வேலை மிகவும் எளிதான ஒன்றுதான். அனைவரும் சாக்லேட் பிடிக்கும் என்பதால் இதுவும் ஒரு நல்ல வேலையாக அமைந்துள்ளது. இந்த வேலைக்கு சராசரியக 43 லட்சம் ரூபாய் வரை ஆண்டிற்கு சம்பாதிக்க முடியும்.
நீர் விளையாட்டு சோதனையாளர்:
நீர் விளையாட்டு தொடர்பான கேளிக்கை பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுகளில் நீங்கள் முதலில் விளையாடி பார்க்கவேண்டும். இது சற்று கடினமான வேலைதான். ஏனென்றால் கொஞ்சம் தவறு நடந்தாலும் அது உங்களுடைய உடல் அல்லது உயிரை பாதிக்கும். இந்த வேலைக்கு ஆண்டிற்கு 16 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
சாம்பி:
இந்த வேலையின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஸோம்பி போல் வேடம் அணிந்துகொண்டு மற்றவர்களை பயப்பட வைக்க வேண்டும். இது குறிப்பாக லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் செய்யப்படும். இந்த வேலைக்கு 8 மணிநேரத்திற்கு 4000 ரூபாய் வரை ஊதியமாக தரப்படுவது குறிப்பிடத்தக்கது.
என்ன என்ன சொல்றாங்க பாருங்களேன்..
மேலும் படிக்க:”ஐஸ் பேபி.. இதுதான் சீக்ரெட்.. அற்புதம் பண்ணுது..” தமன்னா சொல்லும் முகப்பொலிவு மேஜிக்..!