தினமும் காலையில் குளிர்ந்த நீரினை வைத்து முகத்தினைப்பராமரித்து வந்தால் எப்பொழுதும் முகப்பொலிவுடன் தோன்றலாம் எனவும், இந்த எளிய வழிமுறையைத்தான் நான் பின்பற்றுகிறேன் என நடிகை தமன்னா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தினைப் பிடித்துள்ளவர்தான் நடிகை தமன்னா. மெலிந்த உருவம், எப்பொழுதுமே முகப்பொலிவுடன் காணப்படும் நடிகையான தமன்னா சிறந்த நடிகையாக வலம் வரும் நிலையில் அவருடைய முகப்பொலிவு அதற்கு ஒரு முக்கியக்காரணமாகப் பார்க்கப்படுகிறது. பாகுபலி படத்தில் வெள்ளை நிற உடைந்து தமன்னா வந்த நடனக் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை கொள்ளையடித்தது. எப்படி இவர் மட்டும்  இந்த அளவுக்கு முகப்பொலிவை கொண்டுள்ளார்? இதற்கு என்னவெல்லாம் பியூட்டி கிரீம்களை உபயோகிப்பார்? என்று தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் அதிகளவில் இருக்கும்.  ஆனால் இதுவரை எந்த பியூட்டி கிரீம்களையும் பயன்படுத்தியதில்லை எனவும், இயற்கையான சருமப்பொலிவினையும், வீட்டில் உள்ள மஞ்சள், கடலை மாவு போன்றவற்றை மட்டும் தான் பயன்படுத்துவதாக ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை தமன்னா.



மேலும் ஷூட்டிங்கினைத்தவிர்த்து மற்ற நேரங்களில் மேக்கப் போடுவதில்லை என்று ஒரு நேர்காணலில் நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய உடலை எப்பொழுதும் கச்சித்தமாக வைத்துக்கொள்வதற்கு சைவ உணவுகளைத்தான் அதிகம் உட்கொள்வாராம். அசைவ உணவுகளை ஒருபோதும் எடுத்துக்கொள்வதில்லையாம். இந்நிலையில்தான் நடிகை தமன்னா, தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காலையில் முகத்தினைப் பொலிவாகவும், உடலினை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதற்கு அவர் என்ன வழிமுறைகளை பின்பற்றுகிறார்? என வீடியோவாக வெளியிட்டுள்ளார்.. இதில் தினமும் காலை மிகவும்  ஒரு பவுலில் உள்ள  குளிர்ந்த நீரில் முகத்தினை வைத்துஎடுக்கும் பொழுது மிகவும் உற்சாகமாக இருக்கும் எனவும் கூறிய இவர், இந்த எளிய முறைகளைத்தான் என்னுடைய முகப்பொலிவுக்கு பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சில சமயங்களில் களைப்பு, அழுத்தம் காரணமாக தனக்கு அதிக தூக்கம் வரமுடியாத நேரத்தில் எல்லாம் இந்த எளிய பியூட்டி ஹேக்கினைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.


 






மேலும் , இதனைத் தினமும் பின்பற்றுவதினால் தான், குறைபாடற்ற சருமத்தினைப் பெற முடிகிறது என இன்ஸ்டகிராம் வீடியோவில் பதிவிட்டுள்ளார். இதோடு  Ice ice baby!  Here’s my quick and easy go-to morning ritual for reducing the puffiness. Trust me, it works wonders! என்றும் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.