மத்திய பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனத்தில் அப்ரெண்டிஸ் பணியில் 3883 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாந்த்ரா இந்தியா லிமிட்டட் என்னும் அரசு பொதுத்துறை நிறுவனம் சார்பில், அப்ரெண்டிஸ் பணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்ட தேர்வர்கள், இதற்கு நவம்பர் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்தியா முழுவதும் இருந்து ஓராண்டுக்கு அப்ரெண்டிஸ் பணிக்கு 3883 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஐடிஐ அளவில் 1385 இடங்களும் ஐடிஐ அல்லாத 2498 பணியிடங்களுக்கும் ஆட்தேர்வு நடைபெற உள்ளது.
கல்வித் தகுதி என்ன?
ஐடிஐ அல்லாத பிரிவில் விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். எனினும் மொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
ஐடிஐ பிரிவில் விண்ணப்பிக்க, என்சிவிடி / எஸ்சிவிடி அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் முறையான பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் 14 வயது. சில தேர்வுக்கு 18 வயது கட்டாயம். 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
உதவித்தொகை எவ்வளவு?
ஐடிஐ பிரிவுக்கு – ரூ.7 ஆயிரம்
ஐடிஐ அல்லாத பிரிவு பணிகளுக்கு – ரூ.6 ஆயிரம்.
தேர்வு முறை எப்படி?
* மெரிட் லிஸ்ட்
* சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு – ரூ.100
பிற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.200
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் http://recruit-gov.com/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
முன்பதிவு செய்யாத தேர்வர்கள் https://recruit-gov.com/Yantra2024/new_registration.php என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பின், https://recruit-gov.com/Yantra2024/login.php என்ற இணைப்பை க்ளிக் செய்து லாகின் செய்து விண்ணப்பிக்கலாம்.