உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமியில் பெண்களைச்சேர்ப்பதற்கான விண்ணப்பப்படிவம் ஆன்லைனில் தொடங்கியது.
இந்தியாவில் தேசிய பாதுகாப்பு படை மற்றும் கடற்படை அகாடமியில் ஏன் இதுவரை பெண்கள் சேர்க்கப்படவில்லை, அவர்களும் அனைத்து விதமான திறமைகள் உள்ளது. எனவே பெண்களையும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் குஷ்கல்ரா என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு, பாதுகாப்புப் படையில் பெண்களை சேர்க்க கொள்கைகள், வயது, பயிற்சியின் தன்மை, எத்தனை பேரை பணியில் நிரந்தரமாக நியமிப்பது, மருத்துவ ரீதியான தகுதிகள், அவர்களுக்கென்று தனியாக தங்கும் விடுதி, கழிப்பறை போன்றவை ஏற்படுத்த காலதாமதம் ஆகும் என தெரிவித்தது. ஆனால் இதனைக்கருத்தில் நீதிமன்றம் உடனடியாக இதனை நடைமுறைக்குக்கொண்டுவர வேண்டும் என தெரிவித்தது.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு பிரமாணப்பத்திரிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தது. அதில், “ இனிவரும் காலங்களில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களை சேர்ப்பதற்கு முடிவு எடுத்துள்ளதாகவும்“ அதனை விரைவில் நடைமுறைப்படுத்துவோம் எனக்கூறியுள்ளது. இதனைப்பதிவு செய்துக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஹ்ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி தேசிய பாதுகாப்பு படைக்கான தேரவில் பெண்களுக்கும் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவைப்பிறப்பித்தனர். மேலும் இவ்வழக்கினை ரத்து செய்ததோடு, இந்த ஆண்டு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் வருகின்ற நவம்பர் மாதம் வரவிருக்கும் தேர்வில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் உடனடியாக இதனை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசிற்கு சிரமம் இருந்தாலும், உச்சநீதிமன்றத்தின் உத்தவினை மீற முடியாது என்பதால் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தேசிய பாதுகாப்பு படை மற்றும் கடற்படை அகாடமியில் சேர விரும்பும் பெண்களும் இந்த ஆண்டுக்கான தேர்வு விண்ணப்பப்படிவத்தை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதற்காக கடந்த ஜூன் 9 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 10/2021 – NDA II ல் திருத்தம் செய்துள்ளது.
எனவே மத்திய அரசின் தற்போதைய உத்தரவின் படி பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிந்துக்கொள்வோம்.
தேசிய பாதுகாப்பு படை மற்றும் கடற்படை அகாடமியில் சேர விரும்பும் பெண்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் வருகின்ற அக்டோபர் 8 ஆம் மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்வில் திருமணம் ஆகாத பெண்கள் மட்டும் கலந்துக்கொள்ளும் வகையில் ஆன்லைன் விண்ணப்ப வசதியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தேசிய பாதுகாப்பு அகாடமியில் 370 பணியிடங்களையும், கடற்படை அகாடமியில் 30 பணியிடங்களையும் நிரப்புவதை நோக்கமாகக்கொண்டு இந்தாண்டு தேர்வு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் NDA/ NA வில் சேருவதற்கு தேவையான உடல் தகுதிகள் அமைச்சகத்தால் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.